4 ஆண்டுகள் உருவமாகவும் 4 ஆண்டுகளில் நினைவுகளாகவும் – 8ஆம் ஆண்டு திருமண நாளில் சேதுராமன் மனைவி போட்ட உருக்கமான பதிவு.

0
245
- Advertisement -

தங்கள் திருமண நாளில் சேதுராமனின் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகரும் மருத்துவருமான சேது ராமன்கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் சந்தானத்தின் மூலம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பின்னர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 போன்ற படங்களில் கதாநாயகனாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேது ராமன். டாக்டர் சேதுராமன் அண்ணா பல்கலைக்கழகத்தில் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றை திறந்தார்.

- Advertisement -

மருத்துவர் + நடிகர் :

இதில் சந்தானம் பாபிசிம்ஹா நிதின் சத்யா வெங்கட்பிரபு என்று பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையையும் திறந்தார் சேதுராமன்.மருத்துவர் மற்றும் நடிகர் என்று இரண்டு துறையில் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மாரடைப்பால் மறைந்த சேதுராமன் :

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இந்த நிலையில் டாக்டர் சேதுராமன் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்து விட்டார் என்ற ஒரு வதந்தியும் பரவியது. ஆனால், அவர் மாரடைப்பால் தான் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

உமாவிற்கு பிறந்த சேது :

சேதுராமன் இறந்த போது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சேதுராமன் இறந்த 5 மாதத்தில் உமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் கணவர் மீண்டும் வந்துவிட்டார் என்று மிகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார். சேதுராமன் இறப்பிற்கு பின் தன் இரண்டு பிள்ளைகளை கவனித்து வருகிறார் உமா. இந்த நிலையில் இன்று 8ஆம் ஆண்டு திருமண நாளில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் உமா.

திருமண நாள் நாள் பதிவு :

உங்களை நான் அறிந்து 8 வருடங்கள் ஆகிறது… நேரில் 4 வருடங்கள் மற்றும் நினைவில் 4 வருடங்கள். உங்களை நான் தற்போதும் விரும்புகிறேன், தற்போதும் மிஸ் செய்கிறேன். உங்கள் மற்றும் சஹானாவின் பெரும்பாலான படங்களை நான் எடுத்துள்ளேன். ஆனால், பிரசவத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்ததால் நான் புகைப்படம் எடுக்கவில்லை. உடல் எடையை குறைத்துவிட்டு புகைப்படங்கள் எடுக்கலாம் என்று காத்திருந்தேன். அந்த நாட்கள் திரும்ப கிடைக்காது… சஹானா மற்றும் வேதாந்துடன் அதிக நினைவுகளை உருவாக்குவார்.

Advertisement