சிறகடிக்க ஆசை சீரியலுக்கு இணையாக செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்

0
178
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் புது முகங்கள் சில பேர் இருந்தாலும், பழைய முகங்களும் இருக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாண்டியனுக்கு பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக திருமணம் நடந்து விடுகிறது. ஆனால், மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் வீட்டில் எல்லோருமே அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு முன்பை விட கடந்த சில வாரங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. ஒரு வழியாக சரவணனுக்கு சம்பந்தம் பேசி முடிக்கப்படுகிறது.

சீரியல் கதை:

தங்க மயிலை தான் சரவணன் திருமணம் செய்ய இருக்கிறார். தாங்கள் வசதியான குடும்பம் என்று பொய் சொல்லி திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தில் தங்க மயிலுக்கு சரவணனை முழுமையாக பிடிக்கவில்லை என்றாலும் தன் அம்மா, அப்பா கட்டாயத்திற்கு சம்மதிக்கிறார். பிரம்மாண்டமாக வித்தியாசமாக திருமணத்தை நடத்த இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கதிர் -ராஜி இருவரும் ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக இருந்தாலும் தற்போது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நடக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் ப்ரோமோ:

ஒருவருக்கு ஒருவர் துடிக்கிறார்கள். ராஜூவின் அண்ணன் கதிரை வம்பு இழுக்கும்போதெல்லாம் கதிருக்கு பக்கபலமாக ராஜூ நின்று இருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் கதிரை பழிவாங்க வேண்டும் என்று ராஜு அண்ணன் அவரை சாப்பாடு கொண்டு வர சொல்லி அலைய வைக்கிறார். இதை அறிந்த ராஜு, கல்லால் அவரை அடிக்கிறார். உடனே அவர் கதிரை அடிக்க வரும்போது ராஜு தடுக்கிறார். பின் கடுகு சைஸில் இருந்து கொண்டு உனக்குள் இவ்வளவு வீரமா? என்றெல்லாம் கதிர் பேசி இருக்கிறார்.

சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு:

அதற்கு ராஜி, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று சொல்கிறார்கள். பின் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். இனி வரும் நாட்களில் கதிர்- ராஜு இடையே காதல் மலருமா? சரவணனின் கல்யாணம் நல்லபடியாக நடக்குமா? தங்கமயிலின் வீட்டின் உண்மை நிலவரம் பாண்டியனுக்கு தெரிய வருமா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. அதோடு பலருமே பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பாராட்டியும், சிறகடிக்க ஆசையை விட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சூப்பராக இருக்கும் என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement