கில்லி படம் குறித்து நடிகை கிரண் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு.
மேலும், இந்த படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த ஒக்கடு என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
நடிகர் விஜயின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இந்த படம் அமைந்து இருக்கிறது என்று சொல்லலாம்
கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்து இருக்கிறது.
கில்லி படம்:
இதனால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள். அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த மாதம் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் ஏதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். அதோடு படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சில தினங்களில் நிறுத்தி விடுவார்கள்.
படம் குறித்த தகவல்:
கில்லி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவே இல்லை. குறிப்பாக, இளம் தலைமுறையினர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். மேலும், ரீ ரீலீஸில் கில்லி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு சமூக வலைத்தளத்தில் கடந்த சில வாரங்களாகவே கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர், படக்குழு என அனைவருமே தங்களுடைய அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்து வருகின்றார்கள்.
கில்லி பட அனுபவம்:
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை கிரண், கில்லி படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் நான் நடிக்க இருந்தது. அப்போது நான் காதலித்துக் கொண்டிருந்தேன். அதனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்ததை பார்த்து ரொம்ப வருத்தப்பட்டேன். அப்போ நான் எடுத்தது ரொம்ப தவறான முடிவு என்பதை புரிந்து கொண்டேன். காதலில் ஜெயிப்பது முக்கியமில்லை வாழ்க்கையில் ஜெயிப்பது தான் முக்கியம் என்று கூறியிருந்தார்.
கிரண் குறித்த தகவல்:
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெமினி’ படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை கிரண். அதன் பின்னர் இவர் ‘வில்லன்’, கமலஹாசனின் ‘அன்பே சிவம்’ போன்ற படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வந்த இவருக்கு கவர்ச்சி நாயகியாக அங்கிகாரம் கிடைத்தது. பின் அம்மணிக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.