30 செகன்ட் நாடாளுமன்றத்துல இத பத்தி பேசுனா முடிஞ்சிடும். அத ஏன் பண்ணாம இருக்கார் – ராஜாவின் ராயல்டி விவகாரம் குறித்து ஜேம்ஸ் வசந்தன்

0
219
- Advertisement -

ரஜினி படத்துக்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டு இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து இருந்தார். இந்த படத்தில் மோகன் லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், விநாயகம் என்று பலர் நடித்து இருந்தனர். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

-விளம்பரம்-

தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி அவர்கள் காவல் அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ரஜினி அவர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்புகள் எல்லாம் ஏற்கனவே வெளியாகியிருந்தது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அதோடு சில வாரங்களுக்கு முன்புதான் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வந்தது.

- Advertisement -

கூலி படம் குறித்த தகவல்:

அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினி தன்னுடைய கைகளில் தங்க கடிகாரம் கை விலங்கு அணிந்திருந்தார். அதோடு இந்த படத்தில் இவர் தாதா வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய அறிமுக வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார்.

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்:

அந்த இசையை தற்போது ரஜினி நடிக்கும் கூலி படத்திற்கு அனிருத் பயன்படுத்துகிறார். ஏற்கனவே சில மாதங்களாக இளையராஜா, தான் இசையமைத்த பாடல்கள் முழுவதுமே தனக்கு மட்டும்தான் சொந்தம். தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் நிகழ்ச்சிகளிலோ, படங்களிலோ அதற்கான காப்புரிமையை செலுத்தி விட்டு தான் பயன்படுத்தனும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் அனிருத் ரஜினியின் கூலி படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கு இளையராஜா அவர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறது.

-விளம்பரம்-

ஜேம்ஸ் வசந்தன் பேட்டி:

அதோடு இதற்கான உரிய அனுமதியை பெற வேண்டும், இல்லை என்றால் டீசரில் இருந்து அந்த பாடலை நீக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தனக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன், சட்டபூர்வமாக இளையராஜா செய்தது சரிதான். ஆனால், என்னை போன்றோர் இடம் கேட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டோம். காரணம், இசை என்பது தயாரிப்பாளருக்கு தான் சொந்தம்.

இளையராஜா குறித்து சொன்னது:

ஒரு பாடலை காசு கொடுத்து தயாரிப்பாளர் வாங்கி விடுகிறார். பணத்தை வாங்கிக் கொண்டு பாடல்களை தந்து விடுகிறார்கள். அதனால் மொத்த உரிமையும் தயாரிப்பாளருக்கு தான் இருக்கிறது. அதோடு ரஜினியும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள் தான். நட்புக்குள் விரிசல் வருவதற்கு காரணம் பணம், பெண். எவ்வளவு நெருக்கமான நட்பாக இருந்தாலும் பணத்தால் பிரச்சனை வரத்தான் செய்யும். அப்படித்தான் ரஜினியின் படத்தில் இளையராஜா பாடல் பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். என்னை பொருத்தவரை தங்கமகன் படத்தின் போது இளையராஜா அந்த பாடலுக்கு பணத்தை வாங்கி பொருளை கொடுத்து விட்டார். பணம் கொடுத்து பொருளை வாங்கிய தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். சொல்லப்போனால் தயாரிப்பாளர் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும் என்று இளையராஜாவை விமர்சித்து பேசி இருக்கிறார்.

Advertisement