அம்பானி வீட்டு திருமணம் : இட்லி, வடை,சாம்பார் என்று தென்னிந்திய நடிகரை அழைத்த ஷாருக்கான். கொந்தளிக்கும் ரசிகர்கள்

0
183
- Advertisement -

முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் நடிகர் ராம் சரணுக்கு நடந்து இருக்கும் அவமரியாதை குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உலகளவில் மிகப் பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார். இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது.

-விளம்பரம்-

தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சாண்ட் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய திருமணம் ஜூலை மாதம் 12ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. தற்போது திருமணத்திற்கு முந்தையதாக நடைபெற இருக்கும் விழாக்கள் தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

முகேஷ் அம்பானி மகன் திருமணம்:

அந்த வகையில் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை இந்த விழா நடைபெற்றது. அதோட இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என கோலாகலமாக நடைபெற்று இருந்தது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்:

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு என்று பலர் வந்து இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலுள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், ராம்சரண், ரஜினிகாந்த், இயக்குனர் அட்லீ என பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

ஷாருக்கான் நடந்த விதம்:

மேலும், இந்த நிகழ்ச்சியில் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண்- ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஷாருக்கான்- சல்மான்கான் போன்ற பிரபலங்களெல்லாம் நடனாடியிருந்தார்கள். அப்போது மேடையில் இருந்து ஷாருக்கான், ‘இட்லி, வடை, சாம்பார்’ நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? மேடைக்கு வாருங்கள் என்று ராம்சரணை அழைத்திருக்கிறார். இப்படி இவர் கூறியிருந்தது தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

ரசிகர்கள் கோபம்:

இந்நிலையில் இது தொடர்பாக ராம்சரனின் ஒப்பனை கலைஞர் ஜெபஹாசன் என்பவர், நான் ஷாருக்கான் உடைய ரசிகன் தான். ஆனால், அவர் ராம்சரணை இட்லி, வடை, சாம்பார் என்று மேடையில் அழைத்த விதம் எனக்கு பிடிக்கவில்லை. இது அவமரியாதை செயல். இதனால் நான் சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டேன் என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ராம்சரண் ரசிகர்கள் பலருமே ஷாருக்கானிற்கு எதிராகவும், அவரை விமர்சித்தும் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், சில தரப்பினர் ஷாருக்கான்னுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement