விஜய் 63 யில் ஷாருக்கான் உறுதி.! அதிலும் இப்படி ஒரு ரோலில்.! செம போங்க.!

0
1101
Sharuk-Khan
- Advertisement -

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, கதிர், இந்துஜா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷரப் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சாருக்கான் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதான அரங்கில் ஷாருக் கான் அருகில் அமர்ந்திருந்தார் அட்லீ. அப்போதே இதுபற்றிய யூகங்கள் உருவாகின. தொடர்ந்து ஷாருக்கான் அட்லீயின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தார்.

இதை தொடர்ந்து ஷாருக்கான் ‘விஜய் 63’ படத்தில் நடிக்க போகிறார் என்று தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்றும் தகவல்கள் வலம் வந்த நிலையில் தற்போது ஷாருக்கான் இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-

விஜய் 63 படத்தின் கடைசி 15 நிமிடத்தில் மட்டும் ஷாருக் கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்று கூறப்படுகிறது.
வும், ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பை மற்றும் சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. எனினும் அட்லீ மற்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Advertisement