பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தகுதி எனக்கு இல்லயாம்.! புலம்பும் பிரபல நடிகை.!

0
1143
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக நிகழ்ச்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இரண்டு சீசனை போல இந்தச் சீசனையும் கமல்தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் 2 ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

-விளம்பரம்-
Related image

ஓகே ஓகே திரைப்படத்தில் நடித்த ஜாங்கிரி மதுமிதா மட்டும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார். ஆனால், மற்ற போட்டியாளர்கள் யார் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

இதையும் படியுங்க : காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த நடிகை.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த ஷாலு சம்மு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வந்து ரசிகர்கள் கேட்கும் சில சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் எப்போது உங்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகீங்களா என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த ஷாலு சம்மு ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல தகுதிகளை எதிர்பார்க்கின்றனர் அது எனக்கு இல்லை என்று கூறுகின்றனர். அது மட்டும் இல்லை சமீபத்தில் நான் பெற்ற விமர்சனம் என்ன தெரியுமா நான் ஒரு நடிகை என்ற பெயருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று தான்’ என்று மிகவும் சோகத்துடன் கூறியுள்ளார் ஷாலு சம்மு

-விளம்பரம்-
Advertisement