குழந்தைங்க கிட்ட கொஞ்சம் யோசித்து பேசுனா நல்லது – சிவகார்த்திகேயனின் சர்ச்சை வீடியோவிற்கு ஷர்மிளா அட்வைஸ்.

0
525
sharmila
- Advertisement -

கொரிய மக்கள் குறித்து சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் கருத்துக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

அயலான் படம்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பின் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கும் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கொரிய மக்கள் குறித்து சிவா சொன்னது:

அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நான் எப்போது கொரியன் படம் பார்த்தாலும் அதில் நடிக்கிற நடிகர்கள் எல்லோரும் ஒரே மாதிரி தான் தெரிவார்கள். எது ஹீரோ, எது ஹீரோயினி என்று கூட தெரியாது.

ஷர்மிளாவின் பதிவு :

ஆணும், பெண்ணும் அங்கெல்லாம் பார்ப்பதற்கு ஒரு மாதிரி தான் இருப்பார்கள். கொரியால இதை பார்த்தால் டென்ஷன் ஆகிவிடுவார்கள் என்று நகைச்சுவையாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். இப்படி இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் பலரும் கொரிய மக்களைக் குறித்து பள்ளி குழந்தைகள் முன்பு நீங்கள் எப்படி அவதூறாக பேசலாம்? என்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள். நிலையில் நடிகை ஷர்மிளா ‘பிரபலங்கள் சற்று யோசித்து பேசினால் நல்லது..அதுவும் குழந்தைகள் மனதில் இதுபோன்ற தவறான விஷயங்கள் எளிதில் பதிந்துவிடும்’ என்று தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement