நடிகர் சிவகார்த்திகேயன் “எஸ் எம் எஸ் ,ஓகே ஓகே,வி எஸ் ஓ பி” போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்திலும் தற்போது நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாகி நடிக்கவிருக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
மேலும், காமெடி நடிகர்களான சதீஷ், தம்பி ராமையா ஆகியோர்களுக்கு நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அசால்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரபாக பரவி வந்தது.
ஆனால், அது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என்று பின்னர் தான் தெரியவந்த்து. இந்நிலையில் இந்த படத்திற்கு ‘மிஸ்டர் லோக்கல்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள போஸ் ஜில்லா படத்தில் விஜய் கொடுத்த போஸை காபி அடித்து தான் எடுத்துள்ளனர். அதனால் தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் போஸ்டரை கலாய்த்து வருகின்றனர்.