நடிப்புக்கு good bye.. தீவிர அரசியலில் இறங்கும் விஜய்?காரணம் இது தான்-அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
1549
- Advertisement -

நடிகர் விஜய் திடீரென நடிப்பை நிறுத்தப் போகும் செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்டில் சேர்ந்தது. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

- Advertisement -

லியோ படம் குறித்த தகவல் :

தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இது ஆக்ஷன் அதிரடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் நா ரெடி பாடல் வெளியாகி இருந்தது.

தளபதி 68 படம் :

இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்த படத்திற்கு கதாநாயகியாக நடிக்க தமன்னா, கீர்த்தி செட்டி ஆகியோர் உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

-விளம்பரம்-

அரசியலில் களமிறங்கும் விஜய் :

இந்த நிலையில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் அளித்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது, விஜய் அவர்கள் தான் நடிக்கப் போகும் 68வது படத்துடன் தன்னுடைய நடிப்பை நிறுத்தி விட்டு சிறிது காலம் அரசியலில் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இவர் 2024 மே மாதத்திற்குள் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டு, 2025 ஆம் ஆண்டு முழுவதும் மக்கள் இயக்க பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மக்கள் இயக்கம்:

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த இயக்கம் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. அதோடு இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

Advertisement