கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி.
இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் தனுஷ் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தடி மற்றும் முடியை வளர்த்திருந்தார். மேலும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அதன் பார்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தாடி மீசையுடன் இருந்த தனுஷ் அந்த லுக்கை மாற்றியுள்ளார்.
அதாவது தனுஷ் இன்று காலை தன்னுடைய குடும்பத்துடன் “பெற்றோர்கள் மற்றும் யாத்ரா, லிங்கவுடன் சென்று திருப்பதி கோவிலுக்கு வழிபாடு செய்தனர். அப்போது நடிகர் தனுஷ் மற்றும் அவரது மகன்கள் மொட்டை அடித்து இருந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகியது. இது நேர்த்திக்கடனுக்காக என்று சொல்லப்பட்டாலும் தன்னுடைய 50 படத்தின் புதிய தோற்றம் என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு பிறகு தனுஷ் இயக்குனர் சேகர் காமுல்லா இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் எல்,ராய் இயக்கத்தில் ஒரு பாலிவுட் படத்திலும் நடக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் சமீபத்தில் இவர் நடித்திருந்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.