‘அப்பா வயது ஹீரோக்களுடன் ஜோடியா’ – கேலி செய்தவர்களுக்கு சுருதி ஹாசன் கொடுத்த பதில்.

0
384
sruthi
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சுருதிஹாசன் தற்போது சோசியல் மீடியாவில் தன்மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு மிகவும் சாதுரியமாக கூறிய பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பிற மொழி படங்களிலும் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி இருக்கிறார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த லாபம் என்ற படத்தில் நடித்து இருந்தார். மேலும் தற்போது 3ற்க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சுருதிஹாசனை பற்றிய கேள்வி ஓன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சமீப காலமாகவே சினிமா துறையில் வயது வித்தியாசம் இல்லாமல் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். அதுவும் நடிகைகள் தன்னை விட அதிக வயதுடைய நடிகர்களுடன் நடித்தால் மட்டும் பல சர்ச்சைகள் உருவாகின்றன. அந்த வகையில் தான் நடிகை சுருதிஹாசனுக்கு கேள்வி எழுந்துள்ளது.

நடிகை சுருதிஹாசன் சினிமாவிற்கு வந்த காலங்களில் இளம் நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தார். ஆனால் தற்போது 60வயதிற்கு மேலே உள்ள பாலையாவுடன் வீர சிம்மா படத்திலும், வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ் சீவிக்கு கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் இந்த படங்கள் வரும் பொங்களுக்கு வெளியாகும் நிலையில் இவர்களுடன் சுருதி ஹாசன் பட வாய்ப்பு இல்லை என்று நடிக்கிறாரா? இல்லை அதிக பணத்திற்காக இதனை செய்கிறாரா? என்ற கேள்வி சோசியல் மீடியாவில் எழுந்துள்ளது

-விளம்பரம்-

இந்த நிலையில் சுருதிஹாசன் பொதுவாகவே தன் மீது கூறப்படும் விமர்சனங்களுக்கு நேரடியாகவே பதிலளிக்க கூடிய ஒருவர். அந்த வகையில் இந்த கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது `சினிமாவை பொறுத்தவரை வயது என்பது வெறும் எண்கள் தான் அதற்கு சாட்சியாக தன்னை விட 2 மடங்கு வயது குறைவான உள்ள நடிகைகளுடன் ஜோடியாக நடிகர்கள் நடித்து வருகின்றனர். நடிக்கும் திறமை இருந்தால் நாம் இந்த உலகத்தில் இருக்கும் வரையில் நடித்துக்கொண்டே இருக்கலாம் என்று கூறியுள்ளார் சுருதிஹாசன்.

Advertisement