இந்த டாட்டூவை ஏன்டா போட்டோம்னு இருக்கு – தனது டாட்டூவை கேவலமாக விமர்சித்த ஸ்ருதி ஹாசன்.

0
1605
Sruthihaasan
- Advertisement -

தனது உடலில் குதியியுள்ள அந்த டாட்டூவை எண்ணி தற்போது வருத்தப்படுவதாக ஸ்ருதி ஹாசன் கூறி இருக்கும் வீடியோ தற்போது சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சுருதிஹாசன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7 ஆம் அறிவு’ படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன்பு இவர் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதோடு தனது 6 வயதில் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை கூட பாடி இருந்தார் . இவர் 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். கடைசியாக தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சிங்கம் 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்து இருந்தார். அதன் பின்னர் அம்மணியை வேறு எந்த தமிழ் படத்திலும் காண முடியவில்லை.

- Advertisement -

மேலும், ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை தவிர இசையிலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இதனிடையே இவர் லண்டனை சேர்ந்த இசைக்கலைஞர் மைக்கல் கார்சலை காதலித்து இருந்தார். பின் இருவரும் காதலை முறித்துக்கொண்டதாக ஸ்ருதி ஹாசன் அறிவித்தார். தற்போது ஸ்ருதி ஹாசன், சாந்தனு ஹசாரிக்காவை காதலிப்பதாக தெரிவித்தார். இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு முதலே ஒன்றாக வசித்து வருகிறார்கள்.

ஆனால், தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றும் கூறி இருந்தார் ஸ்ருதி ஹாசன்.சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் பெஸ்ட்செல்லர் என்ற வலைத்தொடர் ஆன்லைனில் வெளிவந்து இருந்தது. இது எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதி ஹாசன் அடிக்கடி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் இவர் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் போட்டுள்ள டாட்டூவை பற்றி வருத்தப்படுகிறீர்களா?’ என்று கேள்வி கேட்டு இருந்தார். அப்போது சுருதி ஹாசன் தனது கையில் போட்டு இருக்கும் டாட்டூ ஒன்றை காட்டி ‘இந்த டாட்டூ தான். இந்த டேட்டு பார்ப்பதற்கு காக்கா பி மற்றும் முட்டைக்கோஸ் போல இருக்கிறத. ஆனால்,இது ரோஜாப்பூ’ என்று புலம்பி இருக்கிறார்.

இறுதியாக வால்டர் வீரய்யா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வீர சிம்ஹா ரெட்டி போன்ற படங்களில் சுருதிஹாசன் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் இவர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் ரோமன்ஸ் எல்லாம் செய்து இருந்தது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement