இளம் நடிகையை காதலித்து ஏமாற்றிய போக்கிரி பட பிரபலம் கைது.

0
1393
saisudha
- Advertisement -

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சாய் சுதா. இவர் தெலுங்கு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். இந்நிலையில் தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை சாய் சுதா அவர்கள் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீது புகார் கொடுத்து உள்ளார். புகார் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகை சாய் சுதா அவர்கள் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவாளர் நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகி வந்தாராம். ஆனால், ஒளிப்பதிவார் கொடுத்த வாக்குறுதி படி நடிகை சாய் சுதாவை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதையும் பாருங்க : அச்சு அசலாக நயன் மாதிரி இருக்காங்களா. ஆனால், மேக்கப் இல்லாமல் பாத்தா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

இதை அடுத்து நடிகை சாய் சுதா அவர்கள் ஒளிப்பதிவாளர் ஷியாம் தன்னை ஏமாற்றியதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை சுதாவும் தானும் தங்கள் பிரச்சனை குறித்து சமாதானமாக போக முடிவு செய்து விட்டோம் என கூறி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார் ஷியாம் கே.நாயுடு.

அதற்கான சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம். ஆனால், அந்த ஆவணங்களில் இருந்த கையெழுத்து நடிகை சாய் சுதாவுடையது கிடையாது. அது போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷியாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement