சில்க் ஸ்மித்தாவின் Biopic, பிறந்தநாளில் வெளியான அறிவிப்பு – சிலுக்காக நடிக்கும் இந்த நடிகை யார் தெரியுதா?

0
445
- Advertisement -

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் சில்க். மாவரைக்க வந்த போது சில்க் ஸ்மிதாவை பார்த்த வினுச்சக்ரவர்த்தி வண்டி சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது. இதனை தொடர்ந்து இவர் சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். மேலும், இவர் ரஜினி, கமல், பிரபு போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சில்க் ஸ்மிதா திரை பயணம்:

அதோடு இப்படி ஒரு நடிகையும் இருப்பாரா! என்று அன்றைய கால பிரபலங்களும், மக்களும் விரும்பி வியந்து பார்க்க வைத்த நடிகை சில்க். இவர் கவர்ச்சிக்கு பெயர் போனாலும் நடிப்பு, நடனம் என பல திறமைகளை காட்டியவர். அதுமட்டுமில்லாமல் சில படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து சில ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக இவர் பல விருதுகளை வாங்கியிருக்கிறார். பின் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விகளாலும் , குடி பழக்கத்தினாலும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனால் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார்.

சில்க் ஸ்மிதா தற்கொலை:

இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த உலகை விட்டு சில்க் ஸ்மிதா மறைந்தாலும் இன்றும் ரசிகர்கள் மனதில் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார். இன்று சில்க் ஸ்மிதா உயிருடன் இருந்து இருந்தால் இன்று அவருக்கு 63வது பிறந்த தினம். இந்நிலையில் இன்று சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுக்க பலபேர் முயற்சி செய்திருந்தார்கள். ஆனால், ஏதோ சில காரணங்களால் அந்த முயற்சிகள் எல்லாம் நின்றுவிட்டது.

-விளம்பரம்-

சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம்:

தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை புதுமுக இயக்குனர் ஜெயராம் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் சந்திரிகா ரவி நடிக்கிறார். இவரும் நிறைய கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, இருட்டு அறையில் முரட்டு குத்து, செய், வீரசிம்கா ரெட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை ஒட்டி இந்த படத்தினுடைய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

ஏற்கனவே வித்யா பாலன் நடிப்பில் தி டெர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது. இது சில்க் ஸ்மிதாவின் கதையை வைத்து எடுக்கப்பட்டது. ஆனாலும், இந்த படத்தில் சில்க் ஸ்மிதா வாழ்க்கையின் பல விஷயங்கள் மறைக்கப்பட்டு இருந்தது. தற்போது உருவாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவருடைய வாழ்க்கையில் அனுபவித்த பல இன்னல்களையும் துயரங்களையும் இயக்குனர் சொல்லிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement