நான் சிம்புவின் பேட் ரூமிற்கு சென்ற போது அவர் என்னை தூக்கி சுற்றினர்…!ஷாக் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்…!

0
1600
Simbhu

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு சில வாரங்கள் ஆன நிலையில் பிக் பாஸ் பார்ட்டி, பிக் பாஸ் கொண்டாட்டம் என்று பாஸ் பிரபலங்கள் கொண்டாடத்தில் இருந்து வருக்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மக்களுக்கு மிகவும் அபிமான ஒருவர்களுள் சென்ராயனும் ஒருவர் என்றும் கூறலாம்.

Senrayan

- Advertisement -

மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரசிகர்களிடம் பேசி வருகின்றனர். ஆனால் , சென்ராயனுக்கு சமூக வலைதளத்தில் கணக்கு எதுவும் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சென்ராயன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியாமலேயே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துளளார் சென்ராயன். அந்த பேட்டியில் பேசிய சென்ராயன், நான் பிக் பாஸ் நிகழ்ச்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் நேராக வீட்டிற்கு சென்று நான் ஒரு சில நாட்கள் கிழித்திருந்தேன். அதன் பின்னர் மஹத் ஒரு நாள் எனக்கு போன் செய்து எஸ் டி ஆர் என்னை மீட் செய்ய சொன்னதாக கூறினார்.

Senrayansimbhu

நான் மஹத் சொன்னதும் உடனே சிம்புவை நேரில் காண சென்றிருந்தேன். அவர் வீட்டிற்கு நான் சென்ற போது அவர் பேட் ரூமில் அமர்ந்திருந்தார். என்னை பார்த்ததும் என்னை அவரது தலைக்கு மேலே அப்படியே தூக்கி சுற்றினார்.பின்னர், நீ ஜெயிச்சிட்ட இப்போ நீ வேற ரஞ்சுல இருக்க, நீ இப்போ எல்லார் மனசுலயும் இருக்கிற என்று கூறினார். நாங்கள் 1 மணிக்கு பேச ஆரம்பித்தோம் ஆனால் , நாங்கள் பேசி முடிக்கவே 4.30 மணி ஆகிவிட்டது. சிம்பு எனக்கு ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார் என்று கூறியுள்ளார் சென்ராயன்.