நிதியுதவி மக்களுக்கு சரியாக சேர இதை செய்யுங்க..!சிம்பு வெளியிட்ட வீடியோ..!

0
192
simbhu

கடந்த 15ம் தேதி கோரதாண்டவமாடிய கஜா புயலால், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டு வர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். ஆனால், மக்களுக்கு அளிக்கும் நிதியுதவி நேரடியாக மக்களுக்கு செல்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு மக்களுக்கு அளிக்கபடும் நிதியுதவி நேரடியாக மக்களுக்கு செல்லும் வகையில் சில யோசனைகளை கூறியுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் கூறும் யோசனைகளை நீங்களே கேளுங்கள்.