மீண்டும் துவங்கும் மாநாடு.. பிரச்சனையை தீர்த்து வைத்த சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர்..

0
4595
simbu
- Advertisement -

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்க, சிம்புவை கதாநாயகியாக கொண்டு தொடங்கப்பட்ட” மாநாடு” படம் கைவிடப்பட்டது என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு கூடிய விரைவில் நடிகரை தேர்ந்தெடுத்து படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் தயாரிப்பாளர். இந்த படம் ஒரு அரசியல் கதையை மையமாக வைத்தும், திரில்லர் காட்சிகளை கொண்டதாகவும் இருக்கும் என தகவல்கள் தெரியவந்தன. மேலும், இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன்னுடைய ஃபேஸ்புக்கில் மாநாடு படம் சிம்பு உடன் கைவிடப்பட்டது என்றும் தெரிவித்து இருந்தார் . இதனைத் தொடர்ந்து சிம்பு ” மகா மாநாடு” என்ற படத்தை தந்தை டி. ராஜேந்திரன் அவர்கள் இயக்க எடுக்கப் போகிறோம் என்று அதிரடி அறிவிப்புகளை தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை ஐந்து மொழிகளில் உருவாக்க போகிறார் என்றும் இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இப்படி இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிம்பு மீண்டும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. அப்படி என்னதான் நடந்துச்சுன்னு பார்க்கலாம் வாங்க !! வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருந்த சிம்பு என்ன பிரச்சனையால் நடிக்க முடியாது என்று கூறினார் என்பது தெரியவில்லை. மேலும், சிம்பு அவர்கள் “மப்ஃடி , மகா” ஆகிய இரு படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து வருகிறார் என்றும், இந்த சமயத்தில் தான் மாநாடு படத்தின் பிரச்சனை எரிமலை போல் வெடித்தது.

- Advertisement -

இந்த மாநாடு படத்தின் சர்ச்சைகள் கடந்த 15ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முன்வைக்கப்பட்டது. மேலும், தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், சிவசக்தி பாண்டியன், கே.ராஜன், கே.பாலு, ஜே.எஸ்.கே. சதீஷ் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் கலந்து கொண்டார்கள். மேலும், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் , சிம்புவின் தாயார் உஷாவையும் அழைத்து படம் குறித்த பிரச்சினைகளை கேட்டார்கள். பின் அது சண்டையாக மாறியது. மாற்றி மாற்றி ஒருவருக்கு ஒருவர் திட்டிக் கொண்டு சென்றது. அப்படி இந்த பஞ்சாயத்தில் என்ன நடந்தது ? என்று தயாரிப்பாளரிடம் கேட்டபோது அவர் கூறியது, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வந்த படம் தான் மாநாடு. சிம்பு இந்த படத்தில் நடிப்பதற்காக 2 கோடி ரூபாய் பணத்தை முன்பணமாக வாங்கி இருந்தார்.

Image result for simbu manadu

ஆனால், அவர்கள் ஒதுக்கிய தேதியில் சிம்பு நடித்து கொடுக்கவில்லை. மேலும், இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்து இருந்தார். இயக்குனர் வெங்கட்பிரபுவும் இந்த படம் தள்ளி தள்ளி போய்க் கொண்டே இருக்கிறது என்ற காரணத்தினால் வேறு ஒரு படத்தை இயக்கும் பணியில் கவனம் செலுத்தி விட்டார். எனவே மாநாடு படத்திலிருந்து அனைவரும் விலகிக் கொண்டே வந்து இருந்தார்கள். இந்த நிலையில் மாநாடு படத்திற்காக சிம்புவிடம் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணத்தை குறித்து கேட்பதற்காக சிம்புவின் தயார் உஷாவை நேற்று வர சொல்லி இருந்தோம். அப்போது அவருடைய தாயார் சிம்பு மாநாடு ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையை அவர் கூறினார். மேலும்,என்னுடைய மகன் சிம்பு ஏற்கனவே கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை தயாரிப்பாளர்கள் தான் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சிம்பு எப்பவுமே படத்திற்காக கொடுத்த கால்ஷீட் நேரத்துக்கு தவறாமல் போய் நடித்து வருபவர்.

-விளம்பரம்-

அதற்கு பின்னால் இனிமேல் சிம்புவை மாநாடு பட சூட்டிங்க் அனுப்புகிறேன். காலை10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று உறுதி அளித்தார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர். மேலும், மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதை உறுதிசெய்த தயாரிப்பாளர்கள் சிம்புவிடம் கையெழுத்து வாங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் செல்போனில் பேசினார். அதற்கு வெங்கட் பிரபு கூறியது, சார் சிம்புவும் குறித்த நாளில் தவராமல் படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டால் நான் படத்தை இயக்கத் தயாராக இருக்கிறேன். இனிமேல்தான் தெரியும் நம்ப சிம்பு “மாநாடா ” இல்ல “மகா மாநாடா ” .

Advertisement