தமன்னா, சமந்தாவுக்கு குரல் கொடுத்த பிரபல பாடகிக்கு திருமணம்…நேரில் வாழ்த்திய நடிகைகள்..!

0
1552
samanth

சினிமா துறை பொறுத்த வரை பல முன்னனி நடிகர் மற்றும் நடிககைகளின் படங்களில் எல்லாம் கேட்கும் அவரது குரல்கள் அவர்களது சொந்த குரல் என்பது நமக்கு தெரியும். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளான சமந்தா, தமன்னா போன்ற நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

maanasi

அவரது பெயர் மானஸி, கேரளவி பிறந்த இவர் 15 ஆண்டுகள் கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றுத்தேர்ந்தவர். இவர் முதன்முதலில் தமிழ் வெளியான அன்னக்கொடி என்ற படத்தில் ஜி வி பிரகாஷ் இசையில் “போறாளே” என்ற பாடலை பாடி சினிமா இசை துறையில் நுழைந்தார்.

மேலும் இவர் அஜித் நடித்த ஆர்ம்பம் படத்தில் “ஸ்டைலிஷ் தமிழச்சி” என்ற பாடலையும் பாடியுள்ளார். இதுவரை தமிழ், மலையாளம்,தெலுகு என பல மொழிகளில் பாடிய இவர் “பாகுபலி”படத்தில் தமனாவிற்கு டப்பிங் செய்துள்ளார். மேலும் சமந்தாவிற்கு “அஞ்சான்” படத்தில் டப்பிங் செய்துள்ளார். மேலும் தற்போது சமந்தா மற்றும் ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம்’ என்ற படத்திலும் சமந்தாவிற்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

manasi

தற்போது 25 வயதுக்கும் மானசிக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. அபினேஷ் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார் மானசி. சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் நண்பர்களான தென்னிந்திய கனவுக்கன்னிகள் தமன்னா மற்றும் சமந்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தனர்