நான் தான் லேடி சூப்பர் ஸ்டார் – 90ஸ் ஆக்சன் நாயகி விஜயசாந்தி அளித்த பேட்டி.

0
1088
- Advertisement -

நான் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று நடிகை விஜயசாந்தி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகை இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது, திரைப்பட தேசிய விருது உட்பட பல விருதுகளை விஜயசாந்தி வாங்கியுள்ளார். மேலும், நடிகை விஜயசாந்தி அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர்.

- Advertisement -

விஜயசாந்தி குறித்த தகவல்:

பின் இவர் 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். இப்படி இவர் பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார். இதனால் நடிகை விஜயசாந்தி அவர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார்.

ரீ-என்ட்ரி கொடுத்த விஜயசாந்தி:

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை விஜயசாந்தி அவர்கள் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ‘சரிலேரு நீகேவாரு’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கி இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின் இவர் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விஜயசாந்தி அளித்த பேட்டி;

இப்படி கிட்டத்தட்ட விஜயசாந்தி சினிமா உலகில் நுழைந்து 45 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், சினிமாவில் என்னை பாரதிராஜா தான் அறிமுகம் செய்து வைத்தார். 1979 ஆம் ஆண்டு வெளிவந்த கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் தான் நான் நடிக்க வந்தேன். அதே ஆண்டு தெலுங்கிலும் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தேன். அந்த காலத்திலேயே நான் தான் ஹீரோக்களுக்கு இணையாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருந்தேன். நான் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன்.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சொன்னது:

குறிப்பாக, சண்டை காட்சிகளில் ஹீரோவுக்கு சமமாக நடித்ததால் ரசிகர்கள் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்தார்கள். எனக்கு அது ரொம்ப பெருமையாக இருந்தது. நான் நடித்த ஓசே இராமுலம்மா என்ற படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். தெலுங்கானாவில் ஜமீன்தார்களின் அடுக்கு முறைக்கு எதிராக போராட புரட்சி பெண்ணாக நடித்திருந்தேன். இப்போது கூட என்னை தெலுங்கானாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைக்கிறார்கள்.

என்னை இந்த அளவிற்கு பெருமைப்படுத்திய ரசிகர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக தான் நான் அரசியலுக்கு வந்தேன். அரசியலில் என்னுடைய ரோல் மாடல் ஜெயலலிதா என்று பேசி இருந்தார். மேலும், கடந்த சில வருடங்களாகவே நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜயசாந்தி தான்

Advertisement