விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு அழைக்க மீனாவின் அம்மா, முத்து வீட்டிற்கு வந்தார். அங்கு மீனாவின் அம்மா, சீதா பங்ஷனை பற்றி பேசி இருந்தார். அண்ணாமலை, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. இன்னொரு நாள் நான் வந்து பார்க்கிறேன். என்னுடைய மகன்கள் மருமகள்கள் எல்லோருமே வருவார்கள் என்று சொன்னார். உடனே விஜயா, நான் இல்லாமல் இந்த பங்க்ஷன் நடப்பதா? நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். இதை கேட்டவுடன் சீதாவின் அம்மாவிற்கு ஷாக் ஆனது.

மறுநாள் காலையில் சீதாவின் தாலி பிரித்து கோர்க்கும் விழாவிற்கு முத்துவின் வீட்டிலிருந்து எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது பார்வதியிடம் விஜயா, அங்கு விழாவில் நடப்பது எல்லாம் வீடியோ எடுக்க சொல்லி விட்டார். அதற்குப்பின் விஜயா விழாவிற்கு வந்த ஒவ்வொருவராக பார்த்து அன்பாக பேசி பழகினார். இதை எல்லாம் வீடியோ எடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து சீதாவிற்கு ஷாக் ஆனது. முத்துவும் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். விஜயாவுமே தன் மகளுக்கு செய்வது போல பார்த்து பார்த்து செய்தார். நல்லபடியாக சீதாவின் தாலி பிரித்து கோரிக்கும் விழா நடந்து முடிந்தது.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா விசேஷத்திற்கு வந்த எல்லோருக்கும் ஸ்வீட் ஊட்டி ரொம்ப அன்பாக பேசி இருந்தார். இது எல்லாம் பார்த்து மீனாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே ஷாக் ஆனது. ஆனால், விஜயா எதற்காக இதை எல்லாம் செய்கிறார் என்று புரியவில்லை. வீடியோ எடுத்து முடித்த உடனே விஜயா, பார்வதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா, முத்து இருவரும் பேசிக் கொண்டிருக்க, இதை பார்த்து கடுப்பான அருண், சீதாவை அழைத்து வேலை வைத்தார். இதை எல்லாம் பார்த்த மீனாவிற்கு கடுப்பானது.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் முத்துவுடன் தான் கிரிஷ் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட மேனேஜர், ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி கடையில் வைத்திருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி விட்டார். அதற்குப்பின் கோவிலில் விஜயா அன்னதானம் செய்து கொண்டிருந்தார். எல்லோருமே விஜயாவின் செயலை புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த கோயிலுக்கு அன்னதானம் சாப்பிட வந்த பெரியவரை முத்து தான் ரோடு கிராஸ் பண்ணி விட்டார். அப்போதுதான் கோயிலில் விஜயா அன்னதானம் செய்வது தெரிந்தது.
இன்றைய எபிசோட்:

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் விஜயா அன்னதானம் போடுகிறார் என்று அறிந்தவுடன் முத்துவுமே சாப்பிட போகிறார். முத்துவை பார்த்து விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அப்போது முத்து, அம்மா கையால் சாப்பிட்ட நினைவே இல்லை, சாப்பாடு போடுங்கள் என்று சொன்னவுடன் மனம் தடுமாறி விஜயா முத்துவிற்கு சாப்பாடு பரிமாறினார். முத்துவுமே ரொம்ப சந்தோஷமாக சாப்பிட்டார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்து, விஜயா கையால் சாப்பிட்டதை வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார். விஜயா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
வழக்கம் போல் மனோஜ் அதை நக்கலாக பேசுகிறார். அதற்குப்பின் ஹாஸ்பிடலுக்கு முத்து-மீனா போனார்கள். கிரிஷ் பாட்டியின் உடம்பு நன்றாகிவிட்டதால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று முத்து முடிவெடுத்து இருக்கிறார். கிரிஷுக்குமே முத்து வீட்டை விட்டு வர மனசு இல்லை என்பது தெரிந்து விடுகிறது. இதையெல்லாம் ஒளிந்து நின்று ரோகினி கேட்கிறார். பின் கிரிஷ் பாட்டி, நீ வீட்டில் உண்மையை சொல்லி விடு என்கிறார். இதனால் கோபப்பட்ட ரோகினி, தயவுசெய்து இங்கிருந்து கிளம்பி விடு. நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று வழக்கம்போல தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






