விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, முத்துவிற்கு சப்போர்ட் செய்தார். விஜயா, மனோஜ் இருவரும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தார்கள். இன்னொரு பக்கம் சத்யாவிற்கு ஃபோன் செய்த ரேகா, தன்னை அடைத்து வைத்திருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். சத்யா இதைப் பற்றி முத்துவிடம் சொன்னார். முத்து, நீ உடம்பு சரியில்லாதது போல மயங்கி விழு. உன்னை ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருவார்கள். அங்கு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். முத்து சொன்னதை போலவே ரேகாவும் நடிக்க, சிந்தாமணியின் கணவர் ஹாஸ்பிடலில் சேர்த்தார். இதை அறிந்த சிந்தாமணி, இதெல்லாம் முத்துவுடைய பிளான். ரேகா நம் கையை விட்டு போனால் ஒன்னும் செய்ய முடியாது என்றார்.

மீனா டாக்டர் வேடத்திலும், முத்து- சத்யா- செல்வம் மூவருமே கம்பவுண்டர் கெட்டப்பிலும் ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள். ரேகாவின் ரூமுக்கு வெளியே பயங்கரமாக பாதுகாப்பிற்க்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் மீறி முத்து, மீனா, சத்யா உள்ளே சென்றார்கள். ரேகாவை அழைத்துக் கொண்டு வெளியே வரும்போது பல தடைகள் வருகிறது. இருந்தாலும் அதை எல்லாம் எதிர்த்து முத்து, ரேகாவை ஆம்புலன்சில் அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது வந்த ரேகாவின் அப்பா தன் மகளை காணவில்லை என்று பதறினார்.
சிறகடிக்க ஆசை:
அதோடு அடியாட்களை எல்லாம் முத்து மயக்க மருந்து கொடுத்து மயங்கி கீழே விழ வைத்திருந்தார். அதை பார்த்து ரேகாவின் அப்பா பயங்கரமாக கோபப்பட்டார். ரேகா, சத்யா இருவரையும் முத்து தன்னுடைய பாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தார். பாட்டியிடம் முத்து, ரேகா -சத்யாவின் காதலைப் பற்றியும் அதனால் வந்த பிரச்சனை எல்லாம் சொன்னார். பாட்டி, அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். தைரியமாக இருங்கள் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, சிந்தாமணி ரேகாவை தேடி ஆரம்பித்திடுப்பார். அவர் போலீஸ் ஸ்டேஷனில் சென்று புகார் கொடுப்பதற்குள் நாம் சரியான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார். பின் ரேகாவிடம் தன்னை யாரும் கடத்த வில்லை என்று பேசும்படியாக ஒரு வீடியோவை முத்து ரெக்கார்ட் செய்து விடுகிறார். உடனே பாட்டி, இவர்களை ரொம்ப நாட்களாக மறைத்து வைக்க முடியாது. சீக்கிரமாகவே இவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு செய் என்கிறார். முத்து-மீனா இருவருமே சரி என்றார்கள். அதற்கு பின் முத்து-மீனா இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். அப்போது முத்துவின் வீட்டிற்கு வந்த சிந்தாமணி ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.

சீரியல் ட்ராக்:
சிந்தாமணி, மொத்த குடும்பத்தையும் ஜெயிலில் வைப்பதாக சொல்லி மிரட்டுகிறார். முத்து, போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடு. உன் மகள் கடத்தலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே முத்து, மீனாவிற்கு சப்போர்ட் செய்து சிந்தாமணியை திட்டி அனுப்புகிறார்கள். அதற்குப்பின் விஜயா, இது தேவையில்லாத வேலை. ரேகாவை கொண்டு போய் சிந்தாமணியிடம் விடு என்கிறார். முத்து, அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். எந்த பிரச்சினையும் வராது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். வழக்கம் போல மனோஜ், மீனாவின் குடும்பத்தையும் முத்து செய்த வேலையும் விமர்சித்து பேசுகிறார். அண்ணாமலை, முத்துவிற்கு தான் சப்போர்ட் செய்கிறார்.






