விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்ய கிரிஷ் முத்து, மீனா, கிரிஷ் தயாரானார்கள். அப்போது கிரிஷுக்காக முத்து புது துணி வாங்கி தந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே கிரிஷ் கிளம்புவதால் சந்தோஷமாக வழி அனுப்பினார்கள். ஆனால், வழக்கம் போல் விஜயா தான் கிரிஷை திட்டி கொண்டிருந்தார். அதற்குப்பின் முத்து-மீனா ஹாஸ்பிடல் போனார்கள். ஆனால், அங்கு கிரிஷ் பாட்டி இல்லை. ஷாக்கில் மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. முத்து ஹாஸ்பிடலில் விசாரிக்க, அவர்களுக்குமே தெரியவில்லை என்றார்கள். பின் ரோகினிக்குமே தன் அம்மா காணாமல் போன விஷயம் அறிந்து கவலைப்பட்டார்.

பின் மீனா, கிரிஷை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். முத்து வெளியில் எல்லா இடத்திலுமே விசாரித்தார். இன்னொரு பக்கம் ஷோரூமில் தன் அம்மா காணாமல் போனதை நினைத்து ரோகிணி வருத்தப்பட்டு கொண்டிருந்தார். வீட்டில் விஜயா, கிரிஷை பார்த்து திட்டிக் கொண்டிருந்தார். இதெல்லாம் முத்து-மீனா செய்த வேலையாக தான் இருக்கும். மகனை பார்த்துக்க முடியவில்லை என்று அவன் அம்மா ஓடிவிட்டாள். பேரனை பார்த்துக்க முடியவில்லை என்று அவள் பாட்டி நம்ம தலையில் கட்டி விட்டு சென்று விட்டால் என்று வழக்கம் போல ரோகிணியின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் கிரிஷ் பாட்டி காணாமல் போனதால் விஜயா, அவனை எங்கேயாவது கொண்டு போய் விடுங்கள் என்றெல்லாம் சொன்னார். விஜயாவிற்கு ஏற்றவாறு மனோஜ், கிரிஷ் வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்தார். அண்ணாமலை, மனோஜ் விஜயாவை திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் கிரிஷை அழைத்துக் கொண்டு மீனா தன்னுடைய அம்மாவை பார்க்க போனார். அங்கு கிரிஷ் பார்த்து எல்லோருமே சந்தோஷமாக பேசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சுருதி, ரவியை ஹோட்டலுக்கு வரவைத்து மனோஜ் பேசினார்.

நேற்று எபிசோட்:
அப்போது மனோஜ், கிரிஷை வீட்டில் இருக்கக் கூடாது. அதற்கு நீங்கள் தான் எனக்கு சப்போர்ட் செய்யணும் என்று சொன்னார். இதை கேட்டு சுருதி-ரவி எதுவுமே சொல்லவில்லை. பின் வீட்டிற்கு வந்த முத்து, உங்கள் பாட்டியின் போட்டோ, அம்மா போட்டோ ஏதாவது இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டார். அதற்கு கிரிஷ், எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டார். உடனே மீனா, ஸ்கூலில் கிரிஷ் பாட்டி, அம்மாவுடைய போட்டோ இருக்கும். நாம் அதை வைத்து விசாரிக்கலாம் என்று சொன்னார். இதைக் கேட்டு ரோகினி ஷாக் ஆனார். =

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து, பள்ளிக்கூடத்தில் கிரிஷ் உடைய அம்மா, பாட்டி போட்டோ போன் நம்பர் எல்லாம் இருக்கும். அதை எல்லாம் விசாரித்து சொல்லுங்கள் என்று தன்னுடைய தந்தையிடம் சொல்கிறார். உடனே அண்ணாமலையுமே ஸ்கூலுக்கு போன் செய்து கிரிஷ் பயோடேட்டாவை கேட்டு வாங்கினார். ஆனால், அதில் கிரிஷ் பாட்டியின் போட்டோ தான் இருக்கிறது. கிரிஷ் அம்மா பற்றிய விவரம் எதுவுமே இல்லை. இதனால் ரோகினி மனதுக்குள்ளே சந்தோஷப்பட்டு கொள்கிறார். அதற்குப்பின் க்ரிஷ் பாட்டியின் போட்டோவை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி விட்டு முத்து,மீனா, அண்ணாமலை எல்லோருமே விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து கடுப்பான விஜயா, எதற்கு இந்த தேவையில்லாத வேலை. அவனை கொண்டு போய் எங்கேயாவது விட்டு விடுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மனோஜ், கிரிஷ் இந்த வீட்டில் இருக்கணுமா? இல்லையா? என்பதை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கலாம். யாரெல்லாம் இந்த வீட்டில் கிரிஷ் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று சொல்கிறார். முத்து, மீனா, அண்ணாமலை மூவருமே கை தூக்கிறார்கள். ஆனால், சுருதி- ரவி கையை தூக்கவில்லை. இதை பார்த்த முத்துவிற்கு ஷாக் ஆகிறது. அதற்கு பின் கிரிஷ் இங்கு இருக்க கூடாது என்று சொல்லுங்கள் என்கிறார். அதற்கு விஜயா, மனோஜ் இருவரும் ஓட்டு போடுகிறார்கள். அவர்களுக்குமே ஸ்ருதி, ரவி கையை தூக்கவில்லை. ரோகினி தூக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்த்து கிரிஷ்க்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. பின் கிரிஷ், ரோகினி கையை தூக்க வரும்போது, நான் இங்கே இருக்கிறேன். எங்கும் போக மாட்டேன் என்று கதறுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






