விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் தீபன், அடித்தவுடன் சிட்டி பெயரை சொன்னான். உடனே மீனாவுக்கு இது சிட்டி செய்த வேலைதான் என்று தெரிந்து கொண்டார். பின் இதைப் பற்றி மீனா போலீஸிடம் சொன்னார். சிட்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தார்கள். அப்போது வலி தாங்க முடியாமல் சிட்டி, இது எல்லாம் செய்ய சொன்னது ரோகிணி தான். எனக்கும் அவங்களுக்கும் சின்ன சின்ன டீலிங் இருக்கு என்று சொன்னார். இதை கேட்டவுடன் மீனா-முத்து இருவரும் ஷாக் ஆனார்கள். சிட்டி குருப்பை போலீசார் கைது செய்தார்கள். பின் முத்துவை விடுதலை செய்தார்கள்.

கோபத்துடன் வீட்டிற்கு வந்த மீனா, நீங்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது என்று கத்தி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே என்ன ஆனது? என்று கேட்டார்கள். அதற்கு மீனா, என் கணவர் கைதானதற்கு காரணம் ரோகினி தான் என்று சொன்னார். உடனே ரோகினி, நான் எதுவுமே செய்யவில்லை. என் மீது பழி போடாதீர்கள் என்று சொல்ல, மனோஜும் ரோகினிக்கு சப்போர்ட் செய்தார். அப்போது மீனா, நடந்ததை எல்லாம் சொன்னார். இதை கேட்டவுடன் ரோகினிக்கு ஷாக் ஆனது. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த போலீஸ், ரோகினி செய்த வேலையை சொன்னார்கள்.
சிறகடிக்க ஆசை:
இதை கேட்டு மொத்த குடும்பமும் ஷாக் ஆனது. பின் வீட்டில் உள்ள எல்லோருமே ரோகினியை திட்டினார்கள். பின் போலீசும் ரோகினியை கைது செய்து சென்றார்கள். போலீஸ் ஸ்டேஷனில்
ரோகினி, நான் எந்த தவறும் செய்யவில்லை. சிட்டி எனக்கு தெரிந்தவர் என்பதால் தான் அவரிடம் பேச சொன்னேன். ஆனால், அவரை நான் அடிக்க சொல்லவில்லை என்று சிட்டி பக்கம் திருப்பினார். போலீஸ் ரோகினியை திட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் மர்டர் கேஸ் போடுவேன் என்று சொன்னார். சப்போர்ட் செய்த மனோஜையும் இந்த கேசில் இழுத்து கொண்டார்கள்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் க்ரிஷ், கோயிலில் தன்னுடைய அம்மா ஜெயிலில் இருந்து வெளிவர வேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த ரவி, அண்ணாமலை எதற்காக இங்கு இருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு கிரிஷ், என்னுடைய அம்மாவை போலீஸ் பிடித்து போய்விட்டது என்று சொல்ல, அண்ணாமலை ஷாக் ஆனார். பின் கிரிஷ் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு ரோகினி, மனோஜ் இருவரும் வந்தார்கள். அப்போது கிரிஷ், ஓடிப்போய் ரோகினியை கட்டிப்பிடித்து அம்மா என்றார். அதிர்ச்சியில் விஜயா பார்க்க, உடனே கிரிஷ் ஆண்டி என்று சமாளித்து விட்டார். அதற்கு பின் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை மனோஜ் சொன்னார். பின் விஜயா மீனா, ரோகினியை திட்டினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அண்ணாமலை, இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் விஜயா. நீ மருமகளுக்கு என்னைக்கு மரியாதை கொடுத்திருக்கிறார். 10 லட்சம் ரூபாய் பணத்தை ரோகிணி எப்படி ரெடி பண்ண முடியும். இந்த பிரச்சினையை விட்டிருந்தால் முத்து, மீனாவே சரி செய்திருப்பார்கள். எங்கேயும் அசிங்கப்பட்டு இருக்க வேண்டாம் என்று சொல்கிறார். இதைக் கேட்டு விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் ரூமில் அண்ணாமலையிடம் வருத்தத்தில் விஜயா, இந்த வீட்டிற்கும் உங்களுக்கும் மரியாதை சேர்ப்பதற்கான வேலை செய்கிறேன் என்று பேசுகிறார். இன்னொரு பக்கம் ஷோரூமில் கூட்டம் அலைமோதுகிறது.

சீரியல் ட்ராக்:
ராஜா சொன்ன ஐடியாவை வைத்து ரோகினி- மனோஜ் இருவரும் வியாபாரம் செய்கிறார்கள். அதன் பெயரில் நிறைய லாபம் கிடைத்ததால் ரோகினி சந்தோசப்படுகிறார். இன்னொரு பக்கம் கோயிலுக்கு பார்வதியுடன் விஜயா சென்றிருக்கிறார். அங்கு பார்வதியின் நண்பர், விஜயாவிடம் பேசுகிறார். அப்போது பார்வதி, இவர் தான் டாக்டர் பட்டம் வாங்கி தருகிறார் என்று சொன்னவுடன் விஜயா, டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார். பின் விஜயா, நானும் நிறைய நல்ல விஷயம் செய்து இருக்கிறேன். மீனா திருமணம், கிரிஷ் வீட்டுக்கு வந்த கதை என எல்லாமே தான் நல்ல எண்ணத்தில் செய்தது போல சொல்கிறார். எனக்கு நீங்கள் தான் டாக்டர் பட்டம் வாங்கி தரணும் என்று சொல்கிறார். அதற்கு பார்வதி நண்பர், நீங்கள் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் தான் தருவார்கள். இனிமேல் நீங்கள் செய்யும் நல்ல காரியத்தை எல்லாம் வீடியோ எடுத்து வையுங்கள் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






