விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா விசேஷத்திற்கு வந்த எல்லோருக்கும் ஸ்வீட் ஊட்டி ரொம்ப அன்பாக பேசி இருந்தார். இது எல்லாம் பார்த்து மீனாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே ஷாக் ஆனது. ஆனால், விஜயா எதற்காக இதை எல்லாம் செய்கிறார் என்று புரியவில்லை. வீடியோ எடுத்து முடித்த உடனே விஜயா, பார்வதியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா, முத்து இருவரும் பேசிக் கொண்டிருக்க, இதை பார்த்து கடுப்பான அருண், சீதாவை அழைத்து வேலை வைத்தார். இதை எல்லாம் பார்த்த மீனாவிற்கு கடுப்பானது.

இன்னொரு பக்கம் முத்துவுடன் தான் கிரிஷ் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்ட மேனேஜர், ரோகினிக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டினார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி கடையில் வைத்திருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடி விட்டார். அதற்குப்பின் கோவிலில் விஜயா அன்னதானம் செய்து கொண்டிருந்தார். எல்லோருமே விஜயாவின் செயலை புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அந்த கோயிலுக்கு அன்னதானம் சாப்பிட வந்த பெரியவரை முத்து தான் ரோடு கிராஸ் பண்ணி விட்டார். அப்போதுதான் கோயிலில் விஜயா அன்னதானம் செய்வது தெரிந்தது.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் விஜயா அன்னதானம் போடுகிறார் என்று அறிந்தவுடன் முத்துவுமே சாப்பிட போனார். முத்துவை பார்த்து விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அப்போது முத்து, அம்மா கையால் சாப்பிட்ட நினைவே இல்லை, சாப்பாடு போடுங்கள் என்று சொன்னவுடன் மனம் தடுமாறி விஜயா முத்துவிற்கு சாப்பாடு பரிமாறினார். முத்துவுமே ரொம்ப சந்தோஷமாக சாப்பிட்டார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த முத்து, விஜயா கையால் சாப்பிட்டதை வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். விஜயா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

கடந்த வாரம் எபிசோட்:
வழக்கம் போல் மனோஜ் அதை நக்கலாக பேசி இருந்தார். அதற்குப்பின் ஹாஸ்பிடலுக்கு முத்து-மீனா போனார்கள். கிரிஷ் பாட்டியின் உடம்பு நன்றாகிவிட்டதால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று முத்து முடிவெடுத்து இருந்தார். கிரிஷுக்குமே முத்து வீட்டை விட்டு வர மனசு இல்லை என்பது தெரிந்து விட்டது. இதையெல்லாம் ஒளிந்து நின்று ரோகினி கேட்டார். பின் கிரிஷ் பாட்டி, நீ வீட்டில் உண்மையை சொல்லி விடு என்றார். இதனால் கோபப்பட்ட ரோகினி, தயவுசெய்து இங்கிருந்து கிளம்பி விடு. நான் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என்று வழக்கம்போல தன்னுடைய அம்மாவை திட்டிக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிரிஷ் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்ய கிரிஷ் முத்து, மீனா, கிரிஷ் தயாராகிறார்கள். அப்போது கிரிஷுக்காக முத்து புது துணி வாங்கி தருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே கிரிஷ் கிளம்புவதால் சந்தோஷமாக வழி அனுப்புகிறார்கள். ஆனால் வழக்கம் போல் விஜயா தான் கிரிஷை திட்டி கொண்டிருக்கிறார். அதற்குப்பின் முத்து-மீனா ஹாஸ்பிடல் போகிறார்கள். ஆனால், அங்கு கிரிஷ் பாட்டி இல்லை. ஷாக்கில் மீனாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. முத்து ஹாஸ்பிடலில் விசாரிக்க, அவர்களுக்குமே தெரியவில்லை என்கிறார்கள். பின் ரோகினிக்குமே தன் அம்மா காணாமல் போன விஷயம் அறிந்து கவலைப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் மீனா, கிரிஷை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து வருகிறார். முத்து வெளியில் எல்லா இடத்திலுமே விசாரிக்கிறார். இன்னொரு பக்கம் ஷோரூமில் தன் அம்மா காணாமல் போனதை நினைத்து ரோகிணி வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். வீட்டில் விஜயா, கிரிஷை பார்த்து திட்டிக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் முத்து-மீனா செய்த வேலையாக தான் இருக்கும். மகனை பார்த்துக்க முடியவில்லை என்று அவன் அம்மா ஓடிவிட்டாள். பேரனை பார்த்துக்க முடியவில்லை என்று அவள் பாட்டி நம்ம தலையில் கட்டி விட்டு சென்று விட்டால் என்று வழக்கம் போல ரோகிணியின் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






