விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜால் எதுவும் பேச முடியவில்லை தன் அம்மாவுடன் சென்றார். விஜயா சொன்ன நிகழ்ச்சியும் ரோகினி சொன்ன நிகழ்ச்சியும் ஒன்று தான். ரோகிணியை பார்த்தவுடன் விஜயா முறைத்தார். மனோஜ் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். இன்னொரு பக்கம் ரேகாவின் அப்பாவை சந்தித்த சத்யா, தங்களுடைய காதலை பற்றி போட்டு உடைத்து விட்டார். ரேகாவின் அப்பா, எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும். எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடுக்கிறேன் என்றார். சத்யாவும் சரி என்று அங்கிருந்து வந்து விட்டார். பின் இதைப்பற்றி சத்யா, முத்துவிடம் சொன்னார். முத்து, அவர் நல்ல முடிவு தான் சொல்லுவார் என்றார்.

விஜயா, மனோஜை அழைத்துக் கொண்டு நேராக மேடைக்கு சென்றார். ரோகினியால் எதுவுமே பேச முடியவில்லை. பின் அம்மா-மகனுக்கான போட்டியில் விஜயா- ரோகிணி இருவரும் கலந்து கொண்டு விருதை வென்றார்கள். அப்போது மனோஜ், என்னுடைய அம்மா பேச்சை நான் மீறவே மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். இதைக் கேட்டு ரோகினிக்கு கோபம் தான் வருகிறது. அதற்குப்பின் நிகழ்ச்சியில் கணவன்- மனைவிக்கான போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், வாருங்கள் என்று மனோஜை அழைத்தார். விஜயா ரொம்ப மோசமாக ரோகிணி திட்டி விட்டு அங்கிருந்து மனோஜை அழைத்துக் கொண்டு சென்றார். அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் சத்யாவின் காதல் விவகாரத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறகடிக்க ஆசை:
முத்து, நீ தைரியமாக இரு. ரேகாவின் அப்பாவிடம் பேசி இருக்கிறோம் என்றார். அதற்குப்பின் சிந்தாமணி, அவருடைய கணவரும் ஹோட்டலில் சந்தித்து பேசி கொண்டார்கள். சத்யா தன்னிடம் சொன்ன விஷயத்தை எல்லாம் சிந்தாமணியிடம் ரேகாவின் அப்பா சொன்னார். சிந்தாமணி, நான் ஒரு யோசனை சொல்கிறேன். அதைப்படியே செய்யுங்கள். ரேகாவை சென்னைக்கு வர வைத்து ஒரு ரூமில் அடைத்து வைத்து விடுங்கள். போலீஸ் ஸ்டேஷனில் சத்யா தான் கடத்திவிட்டான் என்று புகார் கொடுத்து விடுங்கள். போலீஸ் பண்ணும் டார்ச்சலில் சத்யாவின் குடும்பம் ரேகாவின் பக்கம் திரும்பவே மாட்டார்கள் என்றார். ரேகாவின் தந்தையும் சிந்தாமணியின் ஐடியாவிற்கு ஒத்துக் கொண்டு ரேகாவிடம் பேசி இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சிந்தாமணி கொடுத்த புகாரால் போலீஸ் சத்யாவை கைது செய்கிறார்கள். சத்யா, தனக்கும் ரேகா கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார். போலீஸ் அதை கேக்கவே இல்லை. சத்யாவை அடித்து இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். மீனாவின் அம்மா சந்திரா, எவ்வளவு எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், போலீஸ் கேட்பதாக இல்லை. பின் சந்திரா, மீனா- முத்து எல்லோருக்குமே போன் செய்து நடந்ததை சொல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் சத்யாவை அடி வெளுத்து வாங்குகிறார்கள். வலி தாங்க முடியாமல் சத்யா கதறுகிறார். அதை பார்த்து சந்திரா ரொம்பவே உடைந்து போகிறார். அப்போது வந்து அருணிடம் சந்திரா- சீதா இருவரும் சத்யாவை காப்பாற்ற சொல்லி கெஞ்சுகிறார்கள். ஆனால், அருண் எதுவும் செய்ய முடியாது என்று அங்கிருந்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
முத்து- மீனா இருவருமே போலிஸிடம் எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அதற்குப்பின் முத்து, நீ சிந்தாமணியை பாலோ செய்து ரேகா இருக்கும் இடத்தை கண்டுபிடி என்று அனுப்பி வைக்கிறார். மீனாவும் சிந்தாமணியை பாலோ செய்து போகிறார். சிந்தாமணி அவருடைய கணவரும் ஒரு வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்த நபரிடம் மீனா, பைனான்சியரிடம் பணம் வாங்க வேண்டும் என்று சொல்கிறார். அந்த நபர், சிந்தாமணியின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் சென்று பேசி என்கிறார். அதற்குப் பின் மீனா, அந்த பெண்ணிடம் பணம் வேண்டும் என்பது போலவே பேசுகிறார். அவர், ரேகா தான் உதவி செய்வார். ஆனால், அவர் காலையில் இருந்து வீட்டை விட்டு வெளிய வரவில்லை என்று சொல்கிறார்.






