விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மேனகா, இது நம்முடைய வாரிசு. தயவு செய்து குழந்தையை தூக்குங்கள் என்று சொல்வதால் ராஜாங்கமும் குழந்தையை தூக்கி கொஞ்சினார். அதற்குப்பின் கருப்பு குழந்தை இடம் விளையாடிக் கொண்டிருந்தார். சேதுவை வெறுப்பேற்றுவது போலவே கருப்பு பேசிக் கொண்டிருந்தார். சேது பயங்கரமாக கோபப்பட்டார். பின் கருப்பு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. குழந்தையை பார்த்துக்கொள் என்று அங்கிருந்து சென்று விட்டார். குழந்தை அழுகிறது. சேது, குழந்தையை தூக்கலாமா? வேண்டாமா? என்று அமைதியாக இருந்தார்.

குழந்தை அழுவதால் சேதுவின் மனமும் கஷ்டப்படுகிறது. ஆனால், சேது வீராப்பிற்காக குழந்தையை தூக்காமல் இருந்தார். குழந்தை அதிகமாக அழுது கொண்டிருந்ததால் மலர் ஓடி வந்து குழந்தையை தூக்கி விட்டார். சேது, குழந்தையை ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாதா? என்று மலர், கருப்பு இருவரையும் திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் ராஜாங்கம் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தார். சேதுவிடம் கொடுத்து குழந்தையை கொஞ்சம் சொல்கிறார் ராஜாங்கம். சேது, என்னால் பழைய விஷயத்தை மறக்க முடியவில்லை. நான் குழந்தையை தூக்க மாட்டேன் என்று அங்கிருந்து சென்றார்.
சின்ன மருமகள்:
இன்னொரு பக்கம் தமிழ்செல்வி, குழந்தையை ராஜாங்கம் வீட்டிலிருந்து எடுத்து வர வேண்டும் கிளம்புங்கள் என்றார். அதைக் கேட்டு அப்பத்தா, தமிழ்செல்வியின் பெற்றோர்கள் எல்லோரும் ஷாக் ஆனார்கள். தமிழ்செல்வி, இனிமேல் என் குழந்தையை அங்கு விட ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றார். அதற்கு பின் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக மேனகா, மலர், கருப்பு மூவரும் குழந்தையை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்று விட்டார்கள். அங்கு குழந்தையை கடத்தும் கும்பல் சேதுவின் குழந்தையை யாருக்கும் தெரியாமல் கடத்தி விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து கருப்பு, மேனகா எல்லோருமே பதறுகிறார்கள். பின் கருப்பு, சேதுவிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். சேது குழந்தை பாசத்தில் கத்துகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சேது நடந்ததை செல்கிறார். ராஜாங்கம் கவலைப்படுகிறார். அப்போது சேது, இந்த இந்த வேலையை எல்லாம் தமிழ் செல்வி தான் செய்திருப்பாள் என்று தமிழ் செல்விக்கு போன் செய்கிறார். சேது, குழந்தை எங்கே? என்று கேட்கிறார். தமிழ் செல்விக்கு ஒன்றுமே புரியவில்லை.

சீரியல் ட்ராக்:
சேது, நீயும் உன் அப்பாவும் சேர்ந்து ஏதாவது திட்டம் போட்டு இருந்தால் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டுகிறார். குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து தமிழ் செல்வி கதறி அழுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொல்லுகிறார்கள். தமிழ் செல்வியால் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தை எனக்கு வேண்டும். எப்படியாவது என் குழந்தையை கொடுங்கள் என்று பதறிக் கொண்டிருக்கிறார். பின் ஹாஸ்பிடலில் சிசிடிவி கேமராவை போலீஸ் செக் பண்ணுகிறார்கள். அதில் ஒரு கிழவி குழந்தையை கடத்திக் கொண்டு போன விஷயம் தெரிகிறது. இதை அறிந்த சேது கொந்தளிக்கிறார்.






