விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் போலீசும் ரோகினியை கைது செய்து சென்றார்கள். போலீஸ் ஸ்டேஷனில் ரோகினி, நான் எந்த தவறும் செய்யவில்லை. சிட்டி எனக்கு தெரிந்தவர் என்பதால் தான் அவரிடம் பேச சொன்னேன். ஆனால், அவரை நான் அடிக்க சொல்லவில்லை என்று சிட்டி பக்கம் திருப்பினார். போலீஸ் ரோகினியை திட்டி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏதாவது நடந்தால் மர்டர் கேஸ் போடுவேன் என்று சொன்னார். சப்போர்ட் செய்த மனோஜையும் இந்த கேசில் இழுத்து கொண்டார்கள்.

க்ரிஷ், கோயிலில் தன்னுடைய அம்மா ஜெயிலில் இருந்து வெளிவர வேண்டும் என்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த ரவி, அண்ணாமலை எதற்காக இங்கு இருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு கிரிஷ், என்னுடைய அம்மாவை போலீஸ் பிடித்து போய்விட்டது என்று சொல்ல, அண்ணாமலை ஷாக் ஆனார். பின் கிரிஷ் ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு ரோகினி, மனோஜ் இருவரும் வந்தார்கள். அப்போது கிரிஷ், ஓடிப்போய் ரோகினியை கட்டிப்பிடித்து அம்மா என்றார். அதிர்ச்சியில் விஜயா பார்க்க, உடனே கிரிஷ் ஆண்டி என்று சமாளித்து விட்டார். அதற்கு பின் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை மனோஜ் சொன்னார். பின் விஜயா மீனா, ரோகினியை திட்டினார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் அண்ணாமலை, இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் விஜயா. நீ மருமகளுக்கு என்னைக்கு மரியாதை கொடுத்திருந்தார். 10 லட்சம் ரூபாய் பணத்தை ரோகிணி எப்படி ரெடி பண்ண முடியும். இந்த பிரச்சினையை விட்டிருந்தால் முத்து, மீனாவே சரி செய்திருப்பார்கள். எங்கேயும் அசிங்கப்பட்டு இருக்க வேண்டாம் என்று சொன்னார். இதைக் கேட்டு விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்குப்பின் ரூமில் அண்ணாமலையிடம் வருத்தத்தில் விஜயா, இந்த வீட்டிற்கும் உங்களுக்கும் மரியாதை சேர்ப்பதற்கான வேலை செய்கிறேன் என்று பேசி இருந்தார். இன்னொரு பக்கம் ஷோரூமில் கூட்டம் அலைமோதியது.

நேற்று எபிசோட்:
ராஜா சொன்ன ஐடியாவை வைத்து ரோகினி- மனோஜ் இருவரும் வியாபாரம் செய்ய லாபம் கிடைத்தது. இன்னொரு பக்கம் பார்வதி, இவர் தான் டாக்டர் பட்டம் வாங்கி தருகிறார் என்று சொன்னவுடன் விஜயா, டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார். பின் விஜயா, நானும் நிறைய நல்ல விஷயம் செய்து இருக்கிறேன். என்று மீனா திருமணம், கிரிஷ் வீட்டுக்கு வந்த கதை என எல்லாமே தான் செய்தது போல சொன்னார். அதற்கு பார்வதி நண்பர், நீங்கள் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் தான் தருவார்கள். இனிமேல் நீங்கள் செய்யும் நல்ல காரியத்தை எல்லாம் வீடியோ எடுத்து வையுங்கள் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் டாக்டர் பட்டம் வாங்க வேண்டும் என்று விஜயா, பார்வதியுடன் சேர்ந்து திட்டம் போடுகிறார். அதன் பின் வீட்டிற்கு வந்த விஜயா, பார்வதியை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு மீனாவிற்கு புடவை தந்து அன்பாக பாசமாக பேசுகிறார். இதை பார்த்து மீனாவிற்கே ஷாக் ஆகிறது. அதோடு வீட்டில் உள்ள எல்லோருமே கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள். ஆனால், வீடியோ எடுக்கும் விஷயம் முத்து, மீனாவிற்கு தெரியவில்லை. விஜயா பாசமாக தான் பேசுகிறார் என மீனா நினைத்து கொள்கிறார். அதற்குப்பின் வீடியோ எடுத்து முடித்த உடனே விஜயா, மீனாவை திட்டி புடவையை உள்ளே கொண்டு போய் வைக்க சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதனால் முத்துவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதற்குப்பின் கிரிஸ் உடன் விஜயா சந்தோமாக கொஞ்சி பேசி விளையாடுவது போல வீடியோ எடுக்க சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து ஸ்ருதி, ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வீடியோவை எல்லாம் எடுத்து முடித்த பின் விஜயா மீண்டும் அந்நியனாக மாறி கிரிஷை திட்டுகிறார். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மாவை பார்க்க அருணின் அம்மா, சீதா வருகிறார்கள். அப்போது அருணின் அம்மா, தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடத்த இருக்கிறோம். நீங்கள் எல்லோரும் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு பின் மீனாவின் அம்மா, உன் மாமியார் வீட்டு குடும்பத்தில் சொல்லிவிடு என்று மீனாவிடம் சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






