கிரிக்கெட் வீரர் தோனியுடன் நடித்த அனுபவம் குறித்து சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகை ரேவதி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் ஹீரோவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது மட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமி, சக்திவேல், போன்ற பல தொடர்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் சின்ன வயதிலிருந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவர் பிரேக் எடுத்தார். அதற்குப்பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த மௌன ராகம் என்ற தொடரின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அதற்குப் பின் இவர் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்திருந்தார்.
நடிகை ரேவதி பேட்டி:
தற்போது இவர் விஜய் டிவி மட்டுமில்லாமல் பிறமொழிச் சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவர் கிரிக்கெட் வீரர் தோணியுடன் சேர்ந்து விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். தற்போது அந்த விளம்பரம் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் பாட்டி ரேவதி கூறி இருப்பது, தமிழும் சரஸ்வதியும் தொடர் தான் எனக்கு மக்கள் மத்தியில் அடையாளத்தை கொடுத்தது.
சீரியல் அனுபவம்:
அதற்குப் பின் சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய அளவு ரீச் ஆகிவிட்டது. தெருவில் நடந்து கூட போக முடியவில்லை. எல்லோருமே அந்த அளவிற்கு கேட்டு விசாரிக்கிறார்கள். அதேபோல் எல்லா சீரியலும் பாட்டி கதாபாத்திரத்தில் வந்தாலும் ஒன்று போல் ஒன்று கிடையாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசங்கள் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு நான் ஜாலியாக பண்ணிக் கொண்டிருக்கிறேன். மேலும், தோனி உடன் சேர்ந்து விளம்பரத்தில் நடிக்க ஆடிஷன் சென்று சென்றிருந்தேன்.
விளம்பர வாய்ப்பு:
ஆடிஷன் முடியும் வரை நான் செலக்ட் ஆகுவேன் என்ற நம்பிக்கையில்லை. நிறைய பேர் ஆடிசனுக்கு வந்திருந்தார்கள். யாராவது ஆடிசனுக்கு கூப்பிட்டாங்கன்னா அதை தவிர்க்காமல் பண்ணுவேன். அப்படித்தான் இந்த விளம்பரத்திற்கும் ஆடிஷன் கொடுத்தேன். நைட் 10 மணிக்கு போன் பண்ணி செலக்ட் ஆகிட்டேன் என்று சொன்னார்கள். வீட்டில் சொன்னதுமே எல்லோருமே நான் தான் உங்க அசிஸ்டன்ட் ஆக வருவேன் என்றெல்லாம் சொன்னார்கள். அப்பதான் இது இவ்வளவு பெரிய விளம்பரமா! என்று எனக்கு தெரிந்தது.
தோனி குறித்து சொன்னது:
தோனியை மீட் பண்ணுவது அதிசயம். இது திடீர்னு என்று கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டமா? என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் தோணியோடு பர்சனல் ஆக பேச முடியவில்லை. ஹலோ மட்டும் தான் சொன்னேன். விளம்பரத்தை பார்த்துவிட்டு எல்லோருமே, நீங்கள் ரொம்ப லக்கி என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு மகன், மகள் யாருமே கிடையாது. என்னுடைய பிரதர், பிரதர் உடைய பசங்க என்று பெரிய ஃபேமிலியா இருக்குறோம். வீட்டில் எல்லோருமே என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். எனக்கு 80 வயது ஆகிவிட்டது என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.