உடைந்த போனை விட அதிக விலையில் போன் வாங்கி கொடுத்த சிவகுமார்..!

0
612
sivakumar
- Advertisement -

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நடிகர் சிவகுமார், செலஃபி எடுக்க வந்த இளைஞசரின் செல் போனை தட்டி விட்ட வீடியோ ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.இந்த வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் தீயாக பரவ நடிகர் சிவகுமாரை பலரும் வறுத்தெடுத்து வந்தனர்.

-விளம்பரம்-

பின்னர் இது குறித்து விளக்கமளித்த நடிகர் சிவ குமார், தான் செய்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக கூறியிருந்தார். மேலும், பாதிக்பட்ட அந்த இலைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அந்த செல் போன் தன்னுடையது இல்லை என்றும் அது தனது அண்ணனுடைய செல் போன் என்றும் அதற்கு நான் இப்போது என்ன பதில் சொல்ல போகிறேன் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த விடியோவை கண்ட அனைவரும் நடிகர் சிவ குமார் அந்த பையனுக்கு புதிய செல் போனை வாங்கி தரவேண்டும் என்று சமூக வலைதளத்தில் வற்புறுத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகுமார் சார்பில் அந்த இளைஞருக்கு ரூ. 21 ஆயிரம் மதிப்பிலான செல்போனை வாங்கி பரிசளித்திருக்கிறார்.

Advertisement