சிவகார்த்திகேயன் படத்தில் ஆக்ஷன் கிங்..!இணையும் மாஸ் கூட்டணி ,வெளியான அதிகாரபூர்வ தகவல்..!

0
226
Sk15

நடிகர் சிவகார்த்திகேயன் ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் கமிட் ஆகியுள்ளார். தற்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை ‘ இயக்குனர் ரவிக்குமார், சிறுத்தை சிவ இயக்கத்தில் புதிய படம் என்று கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘sk 15’ படத்தை ‘இரும்பு திரை ‘ இயக்குனர் மித்ரன் இயக்கஉள்ளதாக அதிகாரபூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இயக்குனர் மித்ரன் இயக்கிய ‘இரும்பு திரை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் அச்ஷன் கிங் அர்ஜுனன் கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. தற்போது சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ள ‘sk 15’ படத்திலும் நடிகர் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

24AM தயாரிக்வுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். மேலும், படத்தில் எடிட்டர் ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் கமிட் ஆகியுள்ளார். படத்தை பற்றிய கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.