உனக்காவது அந்த படம் புடிச்சிருக்கே.! விருது விழாவில் அனைவரையும் சிரிக்க வைத்த SK மகள்.!

0
386
Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களின் குழந்தைகைகள் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். விஜய் மற்றும் ஜெயம் ரவி போன்றவர்களின் குழந்தைகள் சினிமாவில் முகம் காண்பித்துவிட்ட நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் ‘கனா’ படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகினார்.

இந்த படத்தின் பாடல் வெளியிட்டு விழா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற்றது. மேலும், இந்த படத்தில் தனது மகள் ஆராதனாவை பாடகியாக அறிமுகம் செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ‘வாயாடி பெத்த புள்ள ‘ என்ற பாடலை தனது மழலை மொழயில் தனது தந்தையுடன் சேர்ந்து அற்புதமாக பாடியிருந்தார் ஆராதனா.

இதையும் படியுங்க : சிவகார்த்திகேயன் மகள் ‘ஆராதனாவுக்கு’ ரொம்ப பிடிச்ச நடிகர், நடிகை யார் தெரியுமா ?

இந்த பாடல் யூடூயூப், ட்விட்டர் என அணைத்து சமூக பக்கத்திலும் வைரலாக பரவி வந்தது. தற்போது இந்த பாடல் 10 கோடி ரசிகர்களுக்கு மேல் வீவ்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த பாடலுக்காக ஆராதனவிற்கு பல்வேறு விருதுகளும் வந்த வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் JFW என்ற விருது வழங்கும் விழாவில் ஆறாத நாவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது ஆராதனைவிடம்,உங்கள் அப்பா நடித்த எந்த படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்கப்பட்டதற்கு’ சீமா ராஜா’ என்று ஆராதனா கூறினார். அதனைக் கேட்ட சிவகார்த்திகேயன், நல்லவேளை உனக்காவது அந்த படம் பிடித்திருக்கிறது பாதி பேருக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்று கூற அரங்கத்தில் இருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.