செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா : முதல்வர் முன் தமிழ் தாய் வாழ்த்து பாடி அசத்திய சிவகார்திகேயனின் மகள் – வைரலாகும் வீடியோ.

0
589
- Advertisement -

44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் முதல்வர் முன் சிவகார்த்திகேயன் மகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னையில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 28 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2000 வீரர்களுக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின், பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் துவக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள், இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி, தமிழர் வரலாறு குறித்து நடிகர் கமலஹாசன் குரலில் ஒலித்த தமிழ் மண் போன்ற பல விஷயங்கள் அரங்கேற்றப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் பிரபலமான என்ஜாயி என் சாமி பாடல் கூட இந்த நிகழ்ச்சியில் பாடி இருந்தார்கள்.

- Advertisement -

44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி:

இந்த துவக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததற்கு பலரும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இதனையடுத்து நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.

44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழா:

இந்த நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, கீபோர்ட் ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசை கலைஞர் நவீன் ஆகியோர் பல பாடல்களை இசைத்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் கலைநிகழ்ச்சியில் லேசர் லைட் மூலமாக இசைக்கலைஞர்கள் அந்தரத்தில் பறந்தபடி சாகசம் செய்திருந்தார்கள். பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மகன் பாடியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய பாடல்:

அதாவது, 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ் தாய் வாழ்த்து பாடி அசத்தியிருக்கிறார். இது குறித்த புகைப்படம், வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த பலரும் ஆராதனாவை பாராட்டி வருகின்றனர். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியிருந்தார்.

சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:

இதற்கு இவர் பல விருதுகளையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது இவர் அயலான், பிரின்ஸ், கமல் தயாரிப்பில் உருவாகும் படம், மாவீரன் போன்று பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement