60 வயதில் செய்ய வேண்டிய பூஜையை இப்போதே செய்த சிவகார்த்திகேயன் – அப்படி என்ன வேண்டுதல் தெரியுமா ?

0
319
siva
- Advertisement -

கோலிவுட்டில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இவர் நடித்திருந்த டான் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி இருந்தது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

- Advertisement -

நடித்து வரும் படங்கள்:

இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும் ஹாலிவுட் படங்களை மிஞ்சும் படமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கிறார்.

பிரின்ஸ் படம்:

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் வெளியான பிரின்ஸ் சமீபத்தில் வெளியேயிருந்தது. இந்த படத்தில் உக்கரைன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி Maria Ryaboshapka கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தின் வெற்றி கூட்டணியான சூரியும், நடிகர் சத்யராஜும் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இப்படமானது வெற்றியை தரவில்லை முதல் நாளிலேயே கலவையான விமர்ச்சங்களை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

கோவிலில் தரிசனம் செய்த சிககார்திகேயன் :

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைத்துள்ள தருமபுரம் ஆதின பரிபாலனத்திலுள்ள அமைத்துள்ள ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இங்குள்ள காலசம்கார மூர்த்தி இறப்பின் செய்வமாகிய எமதர்மரை வதம் செய்த்தால் இந்த கோவிலானது அட்ட விரட்ட கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மேலும் இந்த கோவிலில் 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இங்கு சிறப்பு பிராத்தனைகளை செய்தால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

இப்படியிருக்கும்போது இந்த கோவிலில் தரிசனன் செய்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அனிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு கஜபூஜை, கோ பூஜை, சுவாமி அம்பாள், கள்ள விநாயகர் போன்ற சந்நிதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகளை செய்தார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கோவிலுக்கு வந்ததை அறிந்த அவருடைய ரசிகர்கள் அங்கு திரண்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement