முதன்முதலாக இரட்டை நாதஸ்வரம் வைத்து வாசித்தது எங்களுடைய குடும்பம் தான் – சிவகார்த்திகேயனின் பூர்வீகத்தை புட்டு வைத்த அவரின் சொந்த சித்தப்பா.

0
1241
sk
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, இவர் , தொகுப்பாளர், சிங்கர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மிக பெரிய அளவில் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவர் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் கமல் தயாரிப்பில் உருவாகும் படம், தெலுங்கு படம் என்று சிவகார்த்திகேயன் பிசியாக நடித்து கொண்டு.

-விளம்பரம்-

தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து முடித்த டான் படம் வெளியாக ;இருக்கிறது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் மே 13ஆம் தேதி திரையரங்கிற்கு வெளியாக இருக்கிறது. தற்போது படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு ரொம்ப பிஸியாக இருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் சித்தப்பா பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் சித்தப்பா அளித்த பேட்டி:

அதில் அவர் சிவகார்த்திகேயன் குறித்து கூறியிருப்பது, நான் தூக்கி எடுத்து வளர்த்த பையன் இப்போது புகழின் உச்சத்தில் இருப்பதை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. நாங்கள் மொத்தம் ஒன்பது பேர். என்னுடைய அண்ணன் தாஸ் அதாவது சிவகார்த்திகேயன் அப்பா சிறை அதிகாரியாக இருந்தவர். அவர் எங்கள் குடும்பத்திலேயே ஒரு தங்கமான நேர்மையான மனிதர். ஆனால், எங்களுடைய அண்ணன் இழப்பு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. சிவகார்த்திகேயன் இப்போது கூட அப்பா என்று சொன்னால் போதும் கண்கலங்கி விடுவார். இதே எங்கள் அண்ணா இப்போது இருந்திருந்தால் கண்டிப்பாக சிவகார்த்தியன் ஐபிஎஸ் ஆகி இருப்பார்.

சிவா அப்பாவின் கனவு:

அவருக்கு மகளை எம்பிபிஎஸ், மகனை ஐபிஎஸ் ஆக்க வேண்டும் என்ற ஆசைதான். ஐபிஎஸ் அதிகாரி அளவுக்கு மேல் சிவகார்த்திகேயனுக்கு புகழ் இருக்கிறது. இருந்தாலும் அவருடைய லட்சியம் மகனை எப்படியாவது ஐபிஎஸ் அதிகாரி ஆக்கி கௌரவிக்க வேண்டும் என்பது தான். சிவகார்த்திகேயனுக்கு சிறு வயதிலிருந்தே மிமிக்கிரி செய்வது ரொம்ப பிடிக்கும். வீட்டில் உள்ள எல்லோர் மாதிரியும் செய்வான். அதுமட்டுமில்லாமல் அவன் இருக்கிற இடமே கலகலப்பாக சந்தோசமாக இருக்கும். அவன் மீடியாவுக்கு சென்றதே எங்கள் குடும்பத்திற்கு யாருக்குமே தெரியாது. டிவியில் வரும் போதுதான் சிவகார்த்திகேயன் அம்மாவிற்கு தெரியவந்தது. அதற்கு பிறகு நாங்கள் அவனுக்கு உறுதுணையாக நின்றோம்.

-விளம்பரம்-

சிவா குறித்து கூறியது:

சிவா அப்படியே மென்மேலும் தன்னோடு விடா முயற்சியால் இப்போது இந்த உயரத்திற்கு வந்திருக்கிறார்.
புகழின் உச்சத்தில் இருந்தாலும் சிவா தன்னடக்கம் கொண்டவர். சிறுவயதில் எப்படி இருந்தாரோ அப்படியேதான் எல்லா உறவுகளிடமும் பழகி கொண்டிருக்கிறார். சூட்டிங் எந்த ஊரில் நடந்தாலும் அந்த ஊரில் இருக்கும் சொந்த காரர்களை பார்த்து விட்டு தான் செல்வார். அந்த அளவிற்கு தங்கமான பையன். அதேபோல் எங்களுடைய அப்பா, அவர்களுடைய அப்பா அதாவது தாத்தா எல்லாம் மிகப் பெரிய நாதஸ்வர வித்வான்கள். முதன்முதலாக இரட்டை நாதஸ்வரம் வைத்து வாசித்தது எங்களுடைய குடும்பம் தான். அதற்காக பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை எங்களுடைய குடும்பம் பல விருதுகள் வாங்கி இருக்கிறது. சிவகார்த்திகேயனும் அவருடைய அப்பாவைப் போலவே இளகிய மனம் கொண்டவர்.

சிவா சித்தப்பா செய்த வேலை:

என்னுடைய அண்ணன் பலருக்கு உதவி செய்திருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தன்னால் முடிந்ததை பலருக்கு செய்துகொண்டிருக்கிறார் என நினைத்தால் பெருமையாக இருக்கிறது. மேலும், நானும் சிவகார்த்திகேயனை பார்க்க சூட்டிங்கிற்கு சென்று இருக்கிறேன். என்னை பார்த்த உடனே அவர் வந்து விடுவார். அந்த அளவிற்கு பாசம் கொண்டவர். எனக்கு ஒரே ஒரு மகள் தான். மீதி அண்ணன் தம்பிகளுக்கு மகன்கள் இருக்கிறார்கள். என் மகளின் திருமணத்தை அண்ணனாக இருந்து சிவகார்த்திகேயன் தான் நடத்தியிருந்தார். என் போனை எடுக்கவில்லை என்றாலும் என் மகள் போன் அடித்தால் உடனே எடுத்து பேசுவார். அந்த அளவிற்கு என் மகளின் மேல் அவருக்கு பாசம் அதிகம். நான் மெயின்டன்சிங்காக வேலை செய்து கொண்டிருந்தேன். அதுமட்டுமில்லாமல் பிரபல தயாரிப்பாளர் சோவியோ பிரிட்டோவிடம் மெயின்டனன்ஸ் ஆக இருந்தேன்.

விஜய் சித்தப்பா-சிவகார்த்திகேயன் சித்தப்பா:

அப்போது அவர், நான் தளபதி விஜயின் சித்தப்பா என்று சொன்னார். நான் உடனே சிவகார்த்திகேயன் சித்தப்பா என்று சொன்னதும் அந்த இடத்தில் இருந்தவர்கள் பலரும் கைதட்டி விசில் அடித்தனர். அது எனக்கு பெருமையாக இருந்தது. இப்போதும் எங்கு போனாலும் சிவகார்த்திகேயன் சித்தப்பா என்று தெரிந்ததும் அவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்க எங்கள் அண்ணன் இல்லை என்பது நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் சித்தப்பா என்று சொல்வதைவிட சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகன் என்று தான் சொல்வேன். அந்த அளவிற்கு அவருடைய படங்கள் எல்லாம் விரும்பி பார்ப்பேன் என்று பல விஷயங்களை கூறியிருக்கிறார்.

Advertisement