தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு யாரும் சினிமா துறையில் கடும் முயற்சிகளை செய்து வளர்ந்து வந்தவர். சமீப காலமாகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அனைத்து படங்களிலும் அவர் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த “நம்ப வீட்டு பிள்ளை” படம் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை தந்தது. மேலும், இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது.
இயக்குனர் பி.எஸ். மித்ரன் அவர்கள் 2018-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற விஷால் மற்றும் அர்ஜுன் நடித்த “இரும்புத்திரை” திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் “ஹீரோ”. இந்த படம் எடுக்க தொடங்கியதில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கி தற்போது வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். மேலும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளார்கள்.
இதையும் பாருங்க : குடிக்கு ஆசை பட்டு அனைத்தையும் கொடுத்து 35 ஆயிரம் ரூபாயையும் இழந்த நடிகை.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து உள்ளார். சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் குழந்தைகளை கவரும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டாக உருவாகி உள்ளது. பல சூப்பர் ஹீரோக்களை பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹீரோ படம் மாஸ் காட்டி உள்ளது. இயக்குனர் பெயரே எழுத்தாளராக வருவது தமிழ் சினிமாவின் சட்டம். ஒரு படத்தின் கதை எழுத 4 பேர் கூட இருப்பார்கள். அதுமட்டும் இல்லாமல் கூட்டமாக உட்கார்ந்து கூட ஆலோசனை செய்வார்கள். பின் ஆலோசனை என்ற பெயரில் சீன்களை மற்றவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு தன் பெயரை மட்டும் போட்டுக் கொள்வார்கள். இதற்கு காரணம் தனக்கு கதை அறிவு இல்லை என மக்களும், தயாரிப்பாளர்களும் நினைத்து விடுவார்கள் என பயந்து மற்றவர்களின் பெயரை போட தயங்குவார்கள்.
இது தான் தமிழ் சினிமா உலகில் கால காலமாக நடந்து வரும் வழக்கம். ஆனால், வெளிநாடுகளில் Steven Spielberg, Martin scorcese, Marvel போன்ற பெரிய நபர்களின் படங்களில் கூட சின்ன எழுத்தாளர்களையும் அங்கீகரிப்பர்கள். சமீபத்தில் கூட அந்ததுன் (Andhadhun) படத்தில் எழுதிய எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கினார் இயக்குனர். தாம் இயக்கும் படத்தில் நம்பிக்கை இருப்பின் தயங்காமல் எழுத்தாளரை அங்கீகரிப்பர். மேலும், தமிழ் சினிமாவில் முதன் முறையாக எழுத்தாளர்களுக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்து உள்ளார் பி.எஸ்.மித்திரன். இது மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம். இனிமேல் தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு விடிவு காலம் தரும் என நம்புகிறேன்.