சிவகார்த்திகேயன் ரசிகன் செய்த வேலையை பாருங்க..! இப்படி ஒரு ரசிகனா.? புகைப்படம் இதோ

0
461
Actor-sivakarthikeyan

தனது கடின உழைப்பால் இன்று சினிமாவில் தனக்கென்று ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் .முதலில் காமெடியனாக தனது பயணத்தை தொலைக்காட்சியில் தொடங்கிய இவர் பின்னர் சினிமாவில் காமெடியனாகி தற்போது ஒரு மாஸான ஹீரோவாக தன்னை நிலை நிறுதியுள்ளார்.

seemaraja

முன்னணி நடிகர்களுக்கு இணையாக தற்போது இவருக்கு பல ரசிகர்களும் இருக்கின்றனர். ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், பின்னர் பொறுப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘வேலைக்காரன் ‘ படம் இவருக்கு ஒரு சிறந்த பெயரை எடுத்து தந்தது. தற்போது “சீம ராஜா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெகன் என்ற ரசிகர் ஒருவர் சிவகாத்திகேயன் மீதுள்ள அன்பால் தான் உழைத்து வாங்கிய லாரிக்கு ‘சீம ராஜா’என்று பெயர் வைத்துளளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர் ‘சொந்த உழைப்பில் லாரி வாங்கி அதற்கு சிவகார்த்திகேயன் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறி விட்டது ‘ என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை கண்டு மன நெகிழ்ச்சி அடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் ‘இன்னும் நிறைய உயரங்கள் பெற வாழ்த்துக்கள் தம்பி’ என்று அந்த ராசிகரை மனமார பாராட்டியுளளார். தற்போது இந்த தகவலையும், அந்த புகைப்படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ட்விட்டரில் மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.