உண்மையாவே சால்வைன்னா பிடிக்காது போல – சால்வை அனுவிக்க வந்த பாரதிராஜாவிடமே சிவகுமார் எப்படி நடந்துள்ளார் பாருங்க.

0
160
Sivakumar
- Advertisement -

சால்வை போட வந்த பாரதி ராஜாவிடம் சிவகுமார் நடந்து கொண்ட விதத்தின் பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் சிவக்குமார். இவர் ஒரு காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார். தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி, பந்தம், சித்தி, அண்ணாமலை போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்து இருக்கிறார் சிவகுமார்.

-விளம்பரம்-

பின் இவர் பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கான காரணத்தையும் அவர் இது வரை கூறியதும் இல்லை. இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமார் செய்திருக்கும் செயல்தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

அதாவது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டத்தில் பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார் கலந்து கொண்டிருந்தார். மேடையில் அவர், பழ கருப்பையா குறித்து பல விஷயங்களை புகழ்ந்து பேசி தன்னைவிட இரண்டு வயது குறைவாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது தவறில்லை என்று அவர் காலில் விழுந்து இருந்தார்.

இதனை அடுத்து மேடையில் சிவகுமாருக்கு முதியவர் ஒருவர் அவருக்கு சால்வை கொடுக்க நின்றிருந்தார். இதை பார்த்து சிவகுமார், அவர் கையில் இருந்த சால்வையை வேகமாக பிடுங்கி கீழே போட்டு இருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருந்தது. ஏற்கனவே, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்தபோது அவருடைய போனை போனை சிவகுமார் தள்ளி விட்டிருந்தார்.

-விளம்பரம்-

அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சிவகுமார் மீண்டும் இப்படி நடந்துகொண்டது பேசு பொருளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சிவகுமாருக்கு சால்வை போட வந்த அந்த நபர் சிவகுமாரின் நெருங்கிய நண்பர் என்று தெரியவந்துள்ளது. இப்படி ஒரு நிலையில் கரீமுடன் வீடியோ வெளியிட்டுள்ள சிவகுமார், அவர் தனக்கு நீண்ட நாள் நண்பர் என்றும், நான் தான் அவருக்கு திருமணமே செய்து வைத்தேன்.

எனக்கு சால்வை அணிவிப்பது பிடிக்காது என்று தெரிந்தே அவர் அப்படி செய்தது தப்பு தான். நானும் அப்படி செய்தது தப்பு தான் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றுகூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மேடையில் பாரதிராஜா சால்வை அனுவிக்க வந்த போது அதனை சட்டென பிடிங்கி அவருக்கே அனுவித்து சிவகுமாரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் பலர் உண்மையாகவே சிவகுமாருக்கு சால்வை பிடிக்காது தான் போல என்று கூறி வருகின்றனர்.

Advertisement