‘ஆமா, இது அதில்ல’ – பத்தல பத்தல பாடல் இந்த வடிவேலு காமெடியின் காபியா ? இதோ வீடியோ.

0
582
vadivelu
- Advertisement -

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் வடிவேலு காமெடியில் இருந்து சுடப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : ஒய்.ஜி.மகேந்திரனின் அட்டர் ஃப்ளாப் படத்தை 11 ஆண்டுகள் கழித்து எடுத்து அமோக வெற்றியாக்கிய விசு.

- Advertisement -

கமலின் விக்ரம் படம் :

சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது.

சர்ச்சையை கிளப்பிய பாடல் :

அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார். இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் முயற்சியை முறியடிக்க பார்க்கிறார்.மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மே 15ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிலும் இந்த படத்தின் பத்தல பத்தல பாடல் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-305-838x1024.jpg

வடிவேலு காமெடியின் காப்பியா ? :

இந்த பாடலில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னும் இல்ல இப்பாலே..என்று மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் பாடலில் இடம்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் வடிவேலு பார்த்திபன் நடித்த குண்டக்க மண்டக்க படத்தில் வரும் ஒரு காமெடி காட்சியில் சுடப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஏற்கனவே காபி சர்ச்சையில் சிக்கிய அனி :

பொதுவாக அனிருத் இசையமைத்தாலே அந்த பாடல் ஹிட் தான் என்றாலும் அது காபி சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையான ஒன்று தான். பேட்ட படம் வெளியான போது அந்த பாடல் சாமி பாடலில் இருந்து சுடப்பட்டது என்று சர்ச்சை எழுந்தது. அதே போல விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜிம்கானா பாடல் அனிருத் இசையமைத்த Zomatto Ad போல இருந்ததும் என்றும் கூறி வந்தனர் என்பது குறிப்ட்டத்தக்கது.

Advertisement