இந்த ஒரு காரணத்தால்தான் 49 வயதாகியும் கல்யாணம் பண்ணிக்கல – எஸ்.ஜே சூர்யா !

0
7032

தமிழ் சினிமாவில் நடிப்பு, கதை, திரைக்கதை, இயக்கம், இசை, தயாரிப்பு என அனைத்தையும் செய்பவர்கள் வெகு சிலரே உள்ளனர். அதில் முக்கியமானவர் எஸ்.ஜே சூரியா. சமீபத்தில் இவர் வில்லனாக நடித்து வெளியான மகேஷ் பாபுவின் ஸ்பைடர் மற்றும் விஜயின் மெர்சல் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அதில் இவர் ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரம் முத்திரை பதிக்கும் அளவிற்கு ஒரு க்ளாஸ் ஆன வில்லனாக நடித்திருந்தார்.
இது குறித்து எஸ்.ஜே சூரியா நிறைய பேசினார். அவருக்கு 49 வயதாகிறது. ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது ஆச்சரியம் தான். பார்ப்பதற்கு மிக இளைமையாகத் தான் தோற்றமளிக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி-62, லேட்டஸ்ட் அப்டேட், 8 தேசிய விருதுகளை வாங்கியவர் தளபதி 62 படத்தில் !

இது குறித்து அவர் பேசியதாவது:

எனக்கு சினிமா மிகவும் பிடிக்கும். அது கடல் போன்றது. என் நடிப்பினை நானே இயக்கினால் அது எனக்கு மக்களிடம் நடிகன் என்ற பெயரைப் பெற்றுத் தரவில்லை. இதனால் மற்ற இயக்குனர்களிடம் நடிக்க சென்றேன். இருந்தும் எனக்கு அது பெயரைப்பெற்றுத் தரவில்லை. மேலும், பெண்களிடமும் நல்ல வரவேற்பை என்னுடைய படங்கள் கொடுக்கவில்லை.
இதனால் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். சினிமாவில் யாரும் அடையாத உயரத்தை அடைய ஆசியப்படுகிறேன். திருமணம் போன்ற உறவுகள் என் லட்சியத்தைக் கெடுத்துவிடும். இதனால் தான் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறேன,.எனக் கூறினார் எஸ்.ஜே சூரியா