பெரிய பிக் பாஸ் குரல் யாருடையது தெரியும் – சின்ன பிக் பாஸ் குரல் யாருடையது தெரியுமா ?

0
1768
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு குரல் கொடுக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக ஞாயிற்று கிழமை தொடங்கியது. முதல் சீசனை தொடர்ந்து இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அனன்யா ராவ், ஐஷு, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது 18 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள்.
வழக்கம் போல் நிகழ்ச்சியில் சண்டை கலவரம் தொடங்கி விட்டது. முதல் நாளே நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியில் அனன்யா, ஐசு, பவா செல்லதுரை, ரவீனா, ஜோவிகா, பிரதீப் ஆண்டனி, யோகேந்திரன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுப்பவர்:

இது ஒரு பக்கம் இருக்க, முதல் சீசன் ஆரம்பித்ததிலிருந்தே பிக் பாஸிற்கு குரல் கொடுப்பவர் குறித்த கேள்வி அனைவரும் மனதிலிமே எழுந்தது. பிரபலங்கள் கூட பிக் பாஸ்க்கு குரல் கொடுத்தவர் யார்? என்று தேடிக் கொண்டிருந்தார்கள். பலரும் நீயா நானா கோபிநாத், சீரியல் நடிகர்கள் யாராவது இருக்குமா? என்றெல்லாம் கூறி இருந்தார்கள். அதிலும் சிலர் கமலஹாசனே பிக் பாஸ்க்கு குரல் கொடுத்திருக்கலாம் என்றும் கூறியிருந்தார்கள்.

-விளம்பரம்-

சாஷோ குறித்த தகவல்:

இறுதியில் சாஷோ என்பவர் தான் பிக் பாஸ்க்கு குரல் கொடுப்பவர் என்பது தெரிந்தது. இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான். ஆனால், இவர் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர் வெறும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் மட்டும் கிடையாது. பாலிவுட்டில் ஹீரோவாகவும் கலக்கி இருக்கிறார். இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். மேலும், இவர் தான் ஏழு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் முதல் நாளே கேப்டன் நாமினேட் செய்த ஆறு நபர்களை சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்கள்.

சின்ன பிக் பாஸ் வீட்டுக்கு குரல் கொடுப்பவர்:

அதில் பெரிய பிக் பாஸ் வீட்டில் பிரதிபலிக்கும் குரல் ஒலிக்காது என்று கூறினார்கள். அந்த சின்ன பிக் பாஸ் வீட்டில் வேறொரு குரல் தான் ஒலிக்கிறது. அவரை பலரும் சின்ன பிக்பாஸ் என்று தான் அழைக்கிறார்கள். வழக்கம் போல யாருப்பா இந்த சின்ன பிக் பாஸ்? என்று பலருமே சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையில் சின்ன பிக் பாஸ் வீட்டுக்குள் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரனின் பெயர் அரவிந்தன். இவர் சென்னை சேர்ந்தவர். இவர் தியேட்டர் ஆர்டிஸ்ட். இவர் கூத்து பட்டறையில் பயிற்சி பெற்றவர். தற்போது தீவிரமாக சினிமாவில் முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு சின்ன பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

Advertisement