தனது இரட்டை குழந்தைகளுடன் கார் விபத்தில் சிக்கிய சின்மயி -குடிகார ஆசாமியால் நடந்த விபரீதம்.

0
984
- Advertisement -

தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் சின்மயி விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் படத்தில் பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே இடையே பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே பின்னணி பாடகி சின்மயி கடந்த 2014 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் வேறு யாரும் இல்லை 2010 ஆம் ஆண்டு வெளியான மாஸ்கோவின் காதலி படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் தான்.

- Advertisement -

சின்மயி-ராகுல் குறித்த தகவல்:

மேலும், இவர் நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த எந்த படமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெற்றியடையவில்லை. பின் இவர் 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மன்மதடு 2 என்ற படத்தை இயக்கி இருந்தார்.

சின்மயி-ராகுல் குழந்தை:

இப்படி ஒரு நிலையில் ராகுல் – சின்மயி தம்பதிக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. பின் கடந்த ஆண்டு சின்மயிக்கு டபுள் சந்தோசமாக Twins குழந்தைகள் பிறந்தது. பலரும் சின்மயிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், சின்மயி அடிக்கடி தன் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

விபத்தில் சிக்கிய சின்மயி:

இந்த நிலையில் பாடகி சின்மயி விபத்தில் சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சின்மயி தன்னுடைய இரட்டை குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது குடிபோதையில் ஆட்டோ ஓட்டுனர் எதிரே வந்திருக்கிறார். அவர் போதையில் தடுமாறி சின்மயின் காரில் மோதி இருக்கிறார். பின் வண்டியை இடித்து விட்டு கூட நிறுத்தாமல் அவர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். மேலும், இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சின்மயி பதிவு:

இதனை அடுத்து இது தொடர்பாக சின்மயி பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், அதிர்ஷ்டவசமாக எனக்கும் என்னுடைய குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு யாரும் எதுவும் நடக்கவில்லை. இது மாதிரியான நபர்களை தண்டிக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் திருந்த மாட்டார்கள் என்று கொந்தளித்துக் கூறியிருக்கிறார். தற்போது சின்மயின் இந்த பதிவை பார்த்து பலருமே அவரிடம் நலம் விசாரித்து வருகிறார்கள்.

Advertisement