சூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.
இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.
அதே போல இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாமை, சூர்யாவை சந்திப்பது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சூர்யா, தனது தந்தையை பார்க்க செல்லும் போது ஏர் போர்டில் பணம் இல்லாமல் தவித்து நடிக்கும் காட்சி பலரையும் கவர்ந்தது.
இந்த காட்சியில் நடிகர் சூர்யாவிற்கு பணம் இல்லாததால் டிக்கெட் குடுக்க மறுப்பார் ஒரு பெண். அந்த பெண்ணின் விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அவருடைய பெயர் அலிஷா மிலானி. இவர் ஏற்கனவே ‘நிர்பந்தம்’ என்ற படத்தின் நடித்துள்ளார். அதே போல இவர் 2016 ஆம் ஆண்டின் மிஸ் சந்திராப்பூர் பட்டத்தையும் 2017 ஆம் ஆண்டில் மிஸ் மகாராஷ்டிரா ஐகான் பட்டத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் தீம் பார்க்கில் ஈர உடையில் கொடுத்த போஸ் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.