இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து உள்ள படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இந்த படத்தில் இவர்களுடன் ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். ஏர் டெக்கான் உரிமையாளர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான கதை. ஆனால், இது முழுக்க முழுக்க வரலாற்றுப் படமாக இருக்காமல் சில சினிமா விஷயங்களையும் பொருத்தி உள்ளார் இயக்குனர். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு அவர்களும் நடிக்கிறார். சூரரைப் போற்று என்று படத்திற்கு டைட்டில் வைத்த காரணம் பற்றி இயக்குனர் சுதா கொங்கரா பேட்டியில் கூறி உள்ளார். அதில் அவர் கூறியது, ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை இன்ஸ்பயர் ஆகி எடுத்த படம். சினிமாவுக்கான சில விஷயங்களைச் சேர்த்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறோம்.
இதையும் பாருங்க : ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பேர் கிரில்ஸ். டெலீட் செய்த டிவீட் இதோ.
இந்த படம் முழுக்க முழுக்க அவரோட கதையை வைத்து உருவானது இல்லை. இந்த படத்தில் டைட்டில் வைக்க நாங்க ரெண்டு விதமாக யோசித்தோம். ஒன்னு பாரதியாரின் கவிதை படி சூரன்னா அறிவாளி, எல்லாத்தையும் கத்துக் கொண்டவன், புரிந்து கொண்டவன். அவரைப் போற்ற வேண்டும் என்று அச்சம் தவிர் கவிதையில் எழுதியிருப்பார். அதன்படி இந்த டைட்டில் ஹீரோவோட கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்தோம். இனொன்று பல பேர் தாங்கள் போன வழியில் பயணிக்காமல் தனக்கென ஒரு வழியை உருவாக்கி அதில் வெற்றி கொண்ட சூரசம்ஹாரம் செய்த ஒரு சூரரைப் போற்றுன்னும் என்று சொல்லலாம்.
இந்த இரண்டு விஷயங்களுக்காக தான் இந்த டைட்டிலை வைத்தோம். கோபிநாத்தின் சாதனைகள் பற்றி பல பேருக்கு தெரியாது. இந்த படத்தில் அதையெல்லாம் பார்க்கலாம். கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும். அதோடு இது ரொம்ப டெக்னிக்கல் ஆன படம். ஏர்லைன்ஸ், ஏரோபிளேன், பிஸ்னஸ் என ஈஸியா புரிஞ்சிக்க முடியாத சில விஷயங்களை மக்களுக்கு புரியும் வகையில் எளிமைப்படுத்தி படமாக்கி இருக்கிறோம். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று இயக்குனர் கூறினார்.