பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.
https://www.youtube.com/watch?v=Y_kO_cwvkuM
இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்.இந்த படம் முழுக்க முழுக்க ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படும் பயோபிக் படம் ஆகும். தமிழில் இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான செயலாகும். இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.
அதே போல இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அந்த வகையில் நம் நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாமை, சூர்யாவை சந்திப்பது போல ஒரு காட்சி இடம்பெற்று இருக்கும். அதில் அப்துல் கலாம் போல பேசி இருந்தது Kpy நவீன் தான். இப்படி ஒரு நிலையில் தனது பேஸ்புக்கில் இந்த படத்தில் தான் பணியாற்றியது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார் நவீன்.

அப்துல்கலாம் ஐயா அவர்களின் குரலில் பேச வாய்ப்பு கொடுத்த சூர்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிய எனக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் சூர்யா அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று யாரோ சொன்னாங்க, உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியாது, ஆனால் இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருக்கின்றீர்கள்’ என்று கூறியுள்ளார். நவீனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.





