முதன் முறையாக விமானத்தில் பயணித்த 100 குழந்தைகள். கனவை நனவாக்கிய சூர்யா.

0
1626
surya
- Advertisement -

சமீப காலமாகவே அனைத்து சினிமா திரையிலும் உலக அளவில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் “சூரரைப் போற்று”. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஏர் டெக்கான் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த மாதிரி எடுக்கப்படும் படம் மிகவும் அரிதான ஒன்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், தெலுங்கு நடிகர் மோகன் பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். நிக்கேத் பொம்மி ரெட்டி அவர்கள் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சிக்கியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இந்த சூரரைப் போற்று படத்தின் முதல் பாடல் சமீபத்தில் தான் வெளியானது. தற்போது இரண்டாவது பாடல் இன்று (பிப்ரவரி 13ஆம் தேதி) வெளியிட உள்ளது.

- Advertisement -

இதை இந்த படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பைஸ் ஜெட் போயிங் 737 விமானத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விமானம் இந்த படத்திற்காகவே வடிவமைக்கப்பட்டது. இந்த விமானம் வானில் 30 நிமிடங்கள் பயணிக்கும் என்றும் இதற்கு முன் விமானத்தில் பயணிக்காத 100 குழந்தைகள் உடன் சூர்யா பயணிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று 100 குழந்தைகள் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்த வரபட்டனர்.

https://www.instagram.com/p/B8gKyqGndfx/

அந்த 100 குழந்தைகளும் விமானத்தில் பறக்க போகும் அனுபவத்தை எண்ணி ஆனந்தம் கொண்டனர். மேலும், சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் படிக்கும் சிறுமி ஒருவர், முதன் முறையாக விமானத்தில் பயணிக்க போகும் அனுபவம் குறித்து விமான நிலையத்தில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement