நடிப்பில் மட்டுமல்ல சைட் பிஸ்னஸிலும் டாப் – நயன் முதல் ரஷ்மிகா வரை செய்யும் பிஸ்னஸ்

0
327
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் நடித்து வரும் முன்னணி நட்சத்திரங்கள் சினிமாவை தவிர, அவர்கள் செய்து வரும் வெற்றிகரமான பிசினஸ் பற்றிய தகவல்கள் தான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் சமந்தா, அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா, நயன்தாரா மற்றும் ராம்சரண் நடத்தி வரும் தொழில்களை பற்றி பார்ப்போம்.

-விளம்பரம்-

சமந்தா:

தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் சமந்தா தற்போது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்த சமந்தா தற்போது தொடர்ந்து நடத்து வருகிறார். இவர் பெண்களின் ஃபேஷன் பிராண்டான சாகியின் இணை நிறுவனர் மட்டுமல்லாமல், நூரிஸ் யூ, சஸ்டைன்கார்ட் போன்ற பிராண்களிலும் முதலீடு செய்து இருக்கிறார்.

- Advertisement -

அல்லு அர்ஜுன்:

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கிக் கொண்டிருப்பவர் அல்ல அர்ஜுன், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்போது ‘புஷ்பா 2’, படத்தில் பிஸியாக இருக்கும் அல்லு, பஃபலோ வைல்ட் விங்ஸ் என்று அமெரிக்கா ஸ்போர்ட்ஸ் பார் வைத்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா:

தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி என தொடர்ந்து நடித்து தங்கள் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர்கள் ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இதில் ராஷ்மிகா ஸ்கின் கேர் பிராண்டான பிளம் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும், நிறைய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா ஆண்களுக்கான கைப்பந்து அணியான ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸின் உரிமையாளராகவும், RWDY எனப்படும் பேஷன் பிராண்டையும் நடத்தி வருகிறார்.

-விளம்பரம்-

நயன்தாரா:

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கிறார். இந்த வகையில் தி லிப் பாம் நிறுவனத்தில் முதலீடு செய்ததோடு 9ஸ்கின் என்ற சொந்த ஸ்கின் கேர் பிராண்டையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.மேலும் Rowdy Pictures என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ராம் சரண்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண், தந்தையைப் போலவே டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற இவர் கொனிடேலா ப்ரொடக்ஷன்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் நடத்துவதோடு, ஹைதராபாத் போலோ மற்றும் ரைடிங் கிளப் என்ற இரண்டு போலோ அணிகளின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

Advertisement