முதல் மரியாதை படத்தில் முதலில் நடிக்க இருந்தது SPB தான். நண்பன் கேட்டும் அவர் நடிக்க மறுத்த காரணம். இதோ வீடியோ.

0
95
SPB
- Advertisement -

முதல் மரியாதை படத்தில் பாரதிராஜா கேட்டும் எஸ்.பி.பி மறுத்த காரணம் குறித்து எஸ்.பி.பியே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் வெளிவந்த ஒரு சில படங்கள் உணர்வுப்பூர்வமாக மக்கள் மனதை விட்டு நீங்காமல் அப்படியே இருக்கிறது. அந்த படங்களில் நடித்த சில நடிகர்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காமல் அதே அந்தஸ்தைப் பெற்று உள்ளார்கள். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாகி இன்று வரை நீங்காத இடம் பிடித்திருக்க படங்களுள் ஒன்று தான் முதல் மரியாதை.

-விளம்பரம்-

இயக்கத்தில் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘முதல் மரியாதை’. இந்த படத்தை பாரதிராஜா அவர்கள் தயாரித்திருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், ராதா, சத்யராஜ், வடிவுகரசி, தீபன், ரஞ்சினி, ஜனகராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க கிராமப்புற பின்னணியை மையமாக கொண்ட கதையாக அமைந்திருந்தது.

- Advertisement -

இளையராஜாவின் இசையும், வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய செய்தது. இந்த படம் நடிகர் திலகத்தின் கடைசி வெற்றி விழா படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த படத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தது எஸ்.பி.பி தான். இதுகுறித்து எஸ்.பி.பி 7ஆண்டுகளுக்கு முன்னர் உயோரிடோ இருந்த போது மேடையிலேயே பேசி இருக்கிறார்.

அதில் பேசி இருக்கும் அவர் ‘பாரதிராஜா இயக்கிய முதல் படமான 16 வயதினிலே படத்தில் நான் தான் பாடுவதாக இருந்தது ஆனால் அப்போது எனக்கு தொண்டை சரியில்லாமல் போனது அதை கேள்விப்பட்டு அவன் என்னை கெட்ட கெட்ட வார்த்தைகள் திட்டினான். அதேபோல முதல் மரியாதை படத்தில் சிவாஜி சார் நடித்த கதாபாத்திரத்தை நான்தான் செய்வதாக இருந்தது. அது எப்படி இருந்திருக்கும் என்பதெல்லாம் வேறு விஷயம்.

-விளம்பரம்-

அவரை போன்று நிச்சயம் என்னால் செய்திருக்க முடியாது, இருந்தாலும் நானும் நன்றாக செய்திருப்பேன். ஆனாலும் அந்த படத்தில் நான் நடிக்காமல் போனதற்கு காரணம் அவன் அந்தபடத்திற்காக 45 நாட்கள் என்னிடம் டேட் கேட்டான். ஆனால், நான் அந்த சமயத்தில் ஒரே நாளில் நான்கு ஐந்து பாடல்களை பாடி இருந்தேன். அதனால் நான் அவனிடம் ஒரு மூனு, நாலு இன்ஸ்டால்மென்ட்ல கேளுடா நான் தரேன்னு சொன்னேன்.

ஆனால், முடியாது என்பதால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இருந்தாலும் நல்லதுக்கு தான் அந்த படம் நல்லதாநின் ஆச்சி’ என்று பேசி இருக்கிறார். எஸ்.பி.பி இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவர் இந்த படத்தில் இடம்பெற்ற பூங்காற்று திரும்புமா பாடலை பாடி இருந்தார். ஆனால், அந்த பாடலும் படத்தில் இடம்பெறவில்லை. மாறாக மலேசியா வாசுதேவன் பாடியது தான் படத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement