விஜய்யின் 62வது படம் ! படப்பிடிப்பின் தேதி மற்றும் இசையமைப்பாளர் யார் தெரியுமா ?

0
2502

மெர்சல் படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திற்காக ஃபேவரட் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் கை கோர்த்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்தின் அப்டேட் தான் தற்போதைய கோலிவுட்டின் ஹாட் டாபிக். படத்தின் அப்டேட்ஸ் அவ்வப்போது
vijayவந்துகொண்டிருந்தாலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.இயக்குனர் முருகதாஸ் படத்திற்கான ஹீரோயின் மற்றும் படக்குழுவை தேர்வு செய்து வருகிறார். படத்திற்கான சூட்டிங் ஜனவரி மாதம் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், ஜனவரி மாதம் 19 ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும், ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் அல்லது நயன்தாராவிடம் பேசப்பட்டு வருவதாகத் தெரிகிறது. அதே போல் படத்தின் இசையமைப்பளராக ‘ஆஸ்கர் நாயகன் ஆளப்போறான் தமிழன்’ ஏ.ஆர் ரஹ்மானிடம் பேசிவருகிறார்கள். அப்படிப் பார்த்தால் இன்னொரு ப்ளாக் பஸ்டர் உறுதி.
vijayதுப்பாக்கி மற்றும் கத்தி படங்களுக்குப் பிறகு முருகதாஸுடன் இணையவுள்ளார் விஜய். முன்னர் வந்த இரு படங்களும் அசத்தல் ஹிட் என்பதால் இப்படமும் ஹிட் ஆக வருவதைப் பார்க்க காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.