அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்..! ஸ்ரீ ரெட்டி அதிரடி பதில்.! என்ன சொன்னார் தெரியும்.?

0
1165
sri-reddy

தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுகு பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வந்த நடிகை தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

sri reddy

தற்போது சென்னையில் உள்ள நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு பேட்டிகளையும் அளித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஸ்ரீரெட்டியிடம் பல்வேறு தமிழ் நடிகர்களை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அஜித் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் பற்றி அவர் தெரிவிக்கையில் “எனக்கு தல அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய லக் தான். அவர் மிகவும் ஹாட்டாக இருக்கிறார். எந்த பெண்ணும் அஜித்தை தவிர வேறு யாரையும் நினைத்து கனவு காண மாட்டார்கள் என்று தான் நினைக்கிறேன் ” என்று கூறியுள்ளார்.

மேலும், “அஜித்தின் மனைவி ஷாலினி மிகவும் கொடுத்து வைத்தவர். அவரை கண்டு நான் மிகவும் பொறாமை படுகிறேன் ” என்று கூறியுள்ளார். அதோடு அஜித் நடித்த படத்தில் எந்த படத்தின் வசனம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு “தெறிக்கவிடலாமா ” என்று கூறி நடித்தே காண்பித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.